• Apr 14 2025

கற்குவாரி தூசு பறித்தவரை மிரட்டிய ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

Chithra / Apr 13th 2025, 9:24 am
image


வவுனியா, ஓமந்தைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது கல் அரியும் நிலையத்திற்கு கற்குவாரி தூசு பெற்றவரை ஒமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஓமந்தை கொந்தக்காரன்குளம் பகுதியில் நபர் ஒருவர் கல் அரியும் நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். 

குறித்த கல் அரியும் நிலையத்தில் கற்களை அரிவதற்காக சீமெந்து, மணல், கற்குவாரி கல் தூசி என்பவற்றை அவர் தனது நிலையத்தில் கொள்வனவு செய்து வைத்துள்ளார்.

அங்கு சிவில் உடையில் சென்ற ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த நிலையத்தில் காணப்பட்ட கற்குவாரி தூசு எப்படி வந்தது எனக் கேட்டு அதற்கான பற்றிச்சீட்டை கோரியுள்ளார். 

இதன்போது குறித்த கல் அரியும் நிலைய உரிமையாளர் தான் அதனை ராஜபக்ஸ என்ற கற்குவாரி உரிமையாளரிடம் பெற்றதாகவும் அதற்கு தனது காசோலைகள் வழ்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், மணல், கல், குவாரி தூசு இறக்கும் போது எமக்கு பற்றிச் சீட்டு வழங்கப்படுவதில்லை எனவும் கூறியுள்ளார். 

இதன்போது ஓமந்தைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஓஐசி பற்றி சீட்டு காட்ட வேண்டும் என அவரை மிரட்டியுள்ளார். இது குறித்த வீடியோ ஆதாரமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

கற்குவாரி தூசு பறித்தவரை மிரட்டிய ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வவுனியா, ஓமந்தைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது கல் அரியும் நிலையத்திற்கு கற்குவாரி தூசு பெற்றவரை ஒமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, ஓமந்தை கொந்தக்காரன்குளம் பகுதியில் நபர் ஒருவர் கல் அரியும் நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். குறித்த கல் அரியும் நிலையத்தில் கற்களை அரிவதற்காக சீமெந்து, மணல், கற்குவாரி கல் தூசி என்பவற்றை அவர் தனது நிலையத்தில் கொள்வனவு செய்து வைத்துள்ளார்.அங்கு சிவில் உடையில் சென்ற ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த நிலையத்தில் காணப்பட்ட கற்குவாரி தூசு எப்படி வந்தது எனக் கேட்டு அதற்கான பற்றிச்சீட்டை கோரியுள்ளார். இதன்போது குறித்த கல் அரியும் நிலைய உரிமையாளர் தான் அதனை ராஜபக்ஸ என்ற கற்குவாரி உரிமையாளரிடம் பெற்றதாகவும் அதற்கு தனது காசோலைகள் வழ்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.அத்துடன், மணல், கல், குவாரி தூசு இறக்கும் போது எமக்கு பற்றிச் சீட்டு வழங்கப்படுவதில்லை எனவும் கூறியுள்ளார். இதன்போது ஓமந்தைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஓஐசி பற்றி சீட்டு காட்ட வேண்டும் என அவரை மிரட்டியுள்ளார். இது குறித்த வீடியோ ஆதாரமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement

Advertisement