• Dec 01 2024

சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு : மட்டக்களப்பில் சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் விழிப்புணர்வு ஊர்வலம்

Tharmini / Dec 1st 2024, 10:47 am
image

சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ.முரளிஸ்வரன் தலைமையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இன்று (01) காலை மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் இருந்து விழிப்புணர்வுப் பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு நகரச் சுற்றுவட்டம், பஸ்நிலையம், திருமலை வீதி ஊடாக மட்டக்களப்பு பொதுச்சந்தைக்கு சென்று மீண்டும் திருமலை வீதியுடாக தாண்டவன்வெளி வரையில் சென்று அங்கிருந்து பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் வரையில் ஊர்வலம் வருகைதந்தது.

இதன்போது எச்.ஐ.வி. தொற்று தொடர்பான அறிவித்தல்கள் வழங்கப்பட்டதுடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடைபெற்றன. 

இந்த நிகழ்வில். எச்.ஐ.வி., எயிட்ஸ் தொடர்பான பல்வேறு விளக்கங்களும் வழங்கப்பட்டன.

அத்துடன் உலக எய்ட்ஸ் தினத்தினை குறிக்கும் வகையில் பாதுகாப்பான பாலியல் உறவுமூலம் எச்ஐவி,எயிட்ஸ் நோயை தடுப்போம் என்னும் ஸ்டிக்கர்கள் முக்கிய இடங்களிலும் பஸ்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் ஒட்டப்பட்ட.

இந்த நிகழ்வுகளில் மட்டக்களப்பு தாதிய பாடசாலைகளின் மாணவர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், வைத்தியர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு : மட்டக்களப்பில் சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் விழிப்புணர்வு ஊர்வலம் சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ.முரளிஸ்வரன் தலைமையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.இன்று (01) காலை மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் இருந்து விழிப்புணர்வுப் பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு நகரச் சுற்றுவட்டம், பஸ்நிலையம், திருமலை வீதி ஊடாக மட்டக்களப்பு பொதுச்சந்தைக்கு சென்று மீண்டும் திருமலை வீதியுடாக தாண்டவன்வெளி வரையில் சென்று அங்கிருந்து பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் வரையில் ஊர்வலம் வருகைதந்தது.இதன்போது எச்.ஐ.வி. தொற்று தொடர்பான அறிவித்தல்கள் வழங்கப்பட்டதுடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடைபெற்றன. இந்த நிகழ்வில். எச்.ஐ.வி., எயிட்ஸ் தொடர்பான பல்வேறு விளக்கங்களும் வழங்கப்பட்டன.அத்துடன் உலக எய்ட்ஸ் தினத்தினை குறிக்கும் வகையில் பாதுகாப்பான பாலியல் உறவுமூலம் எச்ஐவி,எயிட்ஸ் நோயை தடுப்போம் என்னும் ஸ்டிக்கர்கள் முக்கிய இடங்களிலும் பஸ்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் ஒட்டப்பட்ட.இந்த நிகழ்வுகளில் மட்டக்களப்பு தாதிய பாடசாலைகளின் மாணவர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், வைத்தியர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement