புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது
புதுக்குடியிருப்பு 10 வட்டாரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை இடம்பெறுவதாக ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.சுபேசனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று பிற்பகல் குறித்த இடத்திற்கு சென்ற ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.சுபேசன், பொலிஸ் கொஸ்தாபல் (22253) குளாஸ் ஆகிய பொலிஸாரால் 25 லீற்றர் 750 மில்லிலீற்றர் கசிப்பு புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் உள்ள வீட்டிற்கு முன்னால் விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்தோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் ஒட்டுசுட்டான் பொலிஸாரின் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட இருப்பதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பில் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைது- அதிரடியாக களமிறங்கிய ஒட்டிசுட்டான் பொலிஸார். புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது புதுக்குடியிருப்பு 10 வட்டாரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை இடம்பெறுவதாக ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.சுபேசனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று பிற்பகல் குறித்த இடத்திற்கு சென்ற ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.சுபேசன், பொலிஸ் கொஸ்தாபல் (22253) குளாஸ் ஆகிய பொலிஸாரால் 25 லீற்றர் 750 மில்லிலீற்றர் கசிப்பு புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் உள்ள வீட்டிற்கு முன்னால் விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.அத்தோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் ஒட்டுசுட்டான் பொலிஸாரின் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட இருப்பதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.