வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து பொலீஸாரால் கைப்பற்றப்பட்டதோடு, கிளிநொச்சி தர்மபுரம் ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (24) வடமராட்சிப் பகுதியில் இருந்து கூலர் ரக வாகனத்தில் பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குகிடைத்த தகவலுக்கமைய குறித்த வாகனம் கிளிநொச்சி ஏ9 வீதி பரந்தன் பகுதியில் இடை மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது 150 இற்கு மேற்பட்ட கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டதோடு, சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
350 கிலோவுக்கு மேற்பட்ட நிறையுடைய கஞ்சா, வாகனம் மற்றும் சந்தேக நபர் ஆகியோர் கிளிநொச்சி பொலீஸாரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து பொலீஸாரால் கைப்பற்றப்பட்டதோடு, கிளிநொச்சி தர்மபுரம் ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (24) வடமராட்சிப் பகுதியில் இருந்து கூலர் ரக வாகனத்தில் பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குகிடைத்த தகவலுக்கமைய குறித்த வாகனம் கிளிநொச்சி ஏ9 வீதி பரந்தன் பகுதியில் இடை மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது 150 இற்கு மேற்பட்ட கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டதோடு, சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.350 கிலோவுக்கு மேற்பட்ட நிறையுடைய கஞ்சா, வாகனம் மற்றும் சந்தேக நபர் ஆகியோர் கிளிநொச்சி பொலீஸாரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.