• Apr 19 2026

பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தை சடலமாக மீட்பு...!samugammedia

Ziya / Dec 14th 2023, 11:57 am
image

பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தையொன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மஹியங்கனை – பொலன்னறுவை வீதியில், அலுத்தயம பகுதியில் இராணுவ பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே குறித்த ஆண் குழந்தையின் சடலம் நேற்று(13) மாலை மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அவ்விடத்திற்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் சடலத்தை மீட்டுள்ளதுடன் சடலத்திற்கு அருகில் ஒரு கறுப்பு துப்பட்டாவும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிறந்து ஒரு நாளே ஆன சிசுவின் சடலம் என சந்தேகிக்கப்படுவதாகவும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் தெரியவரும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


அதேவேளை பொலிஸாரால் மீட்கப்பட்ட சடலம் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் குறித்த சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தை சடலமாக மீட்பு.samugammedia பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தையொன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மஹியங்கனை – பொலன்னறுவை வீதியில், அலுத்தயம பகுதியில் இராணுவ பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே குறித்த ஆண் குழந்தையின் சடலம் நேற்று(13) மாலை மீட்கப்பட்டுள்ளது.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அவ்விடத்திற்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் சடலத்தை மீட்டுள்ளதுடன் சடலத்திற்கு அருகில் ஒரு கறுப்பு துப்பட்டாவும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.பிறந்து ஒரு நாளே ஆன சிசுவின் சடலம் என சந்தேகிக்கப்படுவதாகவும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் தெரியவரும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.அதேவேளை பொலிஸாரால் மீட்கப்பட்ட சடலம் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement