• Dec 08 2024

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பரிதாப மரணம்..!

Sharmi / Oct 29th 2024, 3:57 pm
image

அனுராதபுரம் மகாவிலாச்சி பிரதேசத்தில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி தாயொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக மகாவிலாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். .

இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றது.

குறித்த சம்பவத்தில் மகாவிலாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

குறித்த தாயார் நேற்று (28) தனது வீட்டுத் தோட்டத்துக்கு வந்த காட்டு யானையைத் துரத்த முயன்றபோது யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பரிதாப மரணம். அனுராதபுரம் மகாவிலாச்சி பிரதேசத்தில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி தாயொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக மகாவிலாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். .இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றது.குறித்த சம்பவத்தில் மகாவிலாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.குறித்த தாயார் நேற்று (28) தனது வீட்டுத் தோட்டத்துக்கு வந்த காட்டு யானையைத் துரத்த முயன்றபோது யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement