சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாட்டாளிபுரம் காட்டுப்பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளாகி இளம் குடும்பஷ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று(25) இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் கூலி வேலை செய்துவிட்டு துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது இடைமறித்த யானை அவரை தாக்கியுள்ளது.
யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவர் தோப்பூர் பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கந்தசாமி சுரேஷ் வயது (37) என தெரியவருகிறது.
உயிரிழந்தவரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு நீதிவான் விசாரணையின் பின்னர் இன்று புதன்கிழமை (26) காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பாட்டாளிபுரத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாட்டாளிபுரம் காட்டுப்பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளாகி இளம் குடும்பஷ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று(25) இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் கூலி வேலை செய்துவிட்டு துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது இடைமறித்த யானை அவரை தாக்கியுள்ளது.யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவர் தோப்பூர் பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கந்தசாமி சுரேஷ் வயது (37) என தெரியவருகிறது.உயிரிழந்தவரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு நீதிவான் விசாரணையின் பின்னர் இன்று புதன்கிழமை (26) காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.