நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் பரவலடையும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில்,பேராதனை பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பல்கலைக்கழக ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என பல்கலைக்கழக சுகாதார நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழக சுகாதார நிலையத்தில் காய்ச்சல், தடிமன் காணப்பட்ட செனட் காரியாலய ஊழியருக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட இந் நோயாளியை இன்று வெள்ளிக்கிழமை (05) உடனடியாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.இதன் காரணமாக ஊழியர்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.samugammedia நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் பரவலடையும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில்,பேராதனை பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்கலைக்கழக ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என பல்கலைக்கழக சுகாதார நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.பேராதனை பல்கலைக்கழக சுகாதார நிலையத்தில் காய்ச்சல், தடிமன் காணப்பட்ட செனட் காரியாலய ஊழியருக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட இந் நோயாளியை இன்று வெள்ளிக்கிழமை (05) உடனடியாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.இதன் காரணமாக ஊழியர்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது.