• Apr 02 2025

கரட் துண்டினால் பறிபோன ஒரு வயது குழந்தையின் உயிர்..!

Chithra / May 12th 2024, 9:06 pm
image

 

அனுராதபுரம் பகுதியில் ஒரு வயது குழந்தையொன்று கரட் துண்டொன்று சிக்கி உயிரிழந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சாலியவெவ - யாய ஹத்தா பகுதியில் வசித்து வந்த சவின் துல்சந்த உபாத்யாய் என்ற ஒரு வயது ஏழு மாத பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

நேற்றையதினம் 11ஆம் திகதி மாலை வீட்டில் இருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றது

உடனடியாக நடவடிக்கை எடுத்த பெற்றோர்கள் குழந்தையை 1990 அம்புலன்ஸ் சேவையின் ஊடாக நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலையில் இருந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை உடனடியாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், 

குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கரட் துண்டினால் பறிபோன ஒரு வயது குழந்தையின் உயிர்.  அனுராதபுரம் பகுதியில் ஒரு வயது குழந்தையொன்று கரட் துண்டொன்று சிக்கி உயிரிழந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.சாலியவெவ - யாய ஹத்தா பகுதியில் வசித்து வந்த சவின் துல்சந்த உபாத்யாய் என்ற ஒரு வயது ஏழு மாத பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.நேற்றையதினம் 11ஆம் திகதி மாலை வீட்டில் இருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதுஉடனடியாக நடவடிக்கை எடுத்த பெற்றோர்கள் குழந்தையை 1990 அம்புலன்ஸ் சேவையின் ஊடாக நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.இதனையடுத்து நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலையில் இருந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை உடனடியாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement