• Aug 04 2026

60 வயது நிறைவு செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு?

Chithra / Aug 4th 2026, 1:51 pm
image

 

நல்ல நடத்தையுடன் 60 வயதை நிறைவு செய்த பொலிஸ்  அதிகாரிகளுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

 

பொலிஸில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும்போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


குடிமைப் பாதுகாப்புத் துறையின் 10,000 உறுப்பினர்கள் பொலிஸ் பணியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 6,000 பேர் ஏற்கனவே பணியில் சேர்ந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.


பொலிஸில் மனிதவளப் பற்றாக்குறை இருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், அந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், குறிப்பாக கீழ்நிலையில் உள்ள அதிகாரிகள் எதிர்கொள்ளும் பணிச்சுமையைக் குறைக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

60 வயது நிறைவு செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு  நல்ல நடத்தையுடன் 60 வயதை நிறைவு செய்த பொலிஸ்  அதிகாரிகளுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும்போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.குடிமைப் பாதுகாப்புத் துறையின் 10,000 உறுப்பினர்கள் பொலிஸ் பணியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 6,000 பேர் ஏற்கனவே பணியில் சேர்ந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.பொலிஸில் மனிதவளப் பற்றாக்குறை இருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், அந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், குறிப்பாக கீழ்நிலையில் உள்ள அதிகாரிகள் எதிர்கொள்ளும் பணிச்சுமையைக் குறைக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement