கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்திற்கு 70 லட்சம் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதாக போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கிளின் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வுக்கு 70 லட்சம் ரூபா செலவளிக்கப்படவில்லை.
குறித்த சங்கீதவியலாளருக்கோ அல்லது பாடலாசிரியருக்கோ கொடுக்கபட்டதாக கூறப்படும் தொகை பொய்யானது.
அதாவது குறித்த கொடுப்பனவு கூட இதுவரை கொடுக்கப்படவில்லை.
கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் மதிப்பீடுகள் அதிகம் என்ற படியினால் நாம் அவற்றை பெற்றுக்கொள்ளவில்லை.
அங்குரார்ப்பண நிகழ்வுக்கு 9 லட்சத்தை விட ஒருசதமேனும் மேலதிகமாக செலவழிக்கவில்லை.
எனவே இதுதொடர்பில் வெளியான உரை பொய்யானது எனவும் அந்த செலவு தொடர்பான அறிக்கையும் பொய் என்று குறிப்பிட்டு, அவரை பதவி விலகுமாறு கோர எவ்வித தேவையும் இல்லை எனவும் தெரிவித்தார்.
'கிளின் சிறிலங்கா' வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வுக்கு 9 லட்சம் மாத்திரமே செலவு. சபையில் நலிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படை. கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்திற்கு 70 லட்சம் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதாக போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,கிளின் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வுக்கு 70 லட்சம் ரூபா செலவளிக்கப்படவில்லை.குறித்த சங்கீதவியலாளருக்கோ அல்லது பாடலாசிரியருக்கோ கொடுக்கபட்டதாக கூறப்படும் தொகை பொய்யானது.அதாவது குறித்த கொடுப்பனவு கூட இதுவரை கொடுக்கப்படவில்லை.கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் மதிப்பீடுகள் அதிகம் என்ற படியினால் நாம் அவற்றை பெற்றுக்கொள்ளவில்லை.அங்குரார்ப்பண நிகழ்வுக்கு 9 லட்சத்தை விட ஒருசதமேனும் மேலதிகமாக செலவழிக்கவில்லை.எனவே இதுதொடர்பில் வெளியான உரை பொய்யானது எனவும் அந்த செலவு தொடர்பான அறிக்கையும் பொய் என்று குறிப்பிட்டு, அவரை பதவி விலகுமாறு கோர எவ்வித தேவையும் இல்லை எனவும் தெரிவித்தார்.