• Nov 28 2024

திருகோணமலை - மாவிலாறு வான் கதவுகள் திறப்பு - வெருகல் பிரதேச செயலகப் பிரிவு பாதிப்பு...!samugammedia

Anaath / Jan 2nd 2024, 6:19 pm
image

திருகோணமலை -மாவிலாறு அணைக்கட்டின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டமையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் வெருகல் பிரதேச செயலகப் பிரிவு பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நிலமை காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிச்சேனை,வட்டவன்,சேனையூர் கிராமங்களிலுள்ள 179 குடும்பங்களைச் சேர்ந்த 506 நபர்கள் இடம்பெயர்ந்து மாவடிச்சேனை-வெருகலம்பதி இந்துக் கல்லூரியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான உதவிகளை வெருகல் பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகின்றது.

அத்தோடு மாவடிச்சேனையிலுள்ள திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியை ஊடறுத்த 2 அடியில் நீர் பரவிச் செல்வதால் இவ் வீதியால் பயணிக்குக் வாகனங்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதை காணமுடிந்தது.

வெருகல் மக்கள் வங்கி,வெருகல் பிரதேச சபை வளாகம் போன்றவற்றில் வெள்ளநீர் தேங்கி நிற்பதை காணமுடிந்தது.

வீடுகள், வயல் நிலங்கள் போன்றவற்றில் வெள்ளநீர் தேங்கி நிற்பதையும் அவதானிக்க முடிந்தது.

வெருகல்-இலங்கைத்துறை முகத்துவார வீதியிலும் நீர் ஊடறுத்துச் செல்வதால் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளதோடு கடற்படையினர் படகு மூலம் மறு திசைக்கு கொண்டு செல்வதற்கான உதவிகளை செய்து வருகின்றனர்.


திருகோணமலை - மாவிலாறு வான் கதவுகள் திறப்பு - வெருகல் பிரதேச செயலகப் பிரிவு பாதிப்பு.samugammedia திருகோணமலை -மாவிலாறு அணைக்கட்டின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டமையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் வெருகல் பிரதேச செயலகப் பிரிவு பாதிக்கப்பட்டுள்ளது.வெள்ள நிலமை காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிச்சேனை,வட்டவன்,சேனையூர் கிராமங்களிலுள்ள 179 குடும்பங்களைச் சேர்ந்த 506 நபர்கள் இடம்பெயர்ந்து மாவடிச்சேனை-வெருகலம்பதி இந்துக் கல்லூரியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான உதவிகளை வெருகல் பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகின்றது.அத்தோடு மாவடிச்சேனையிலுள்ள திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியை ஊடறுத்த 2 அடியில் நீர் பரவிச் செல்வதால் இவ் வீதியால் பயணிக்குக் வாகனங்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதை காணமுடிந்தது.வெருகல் மக்கள் வங்கி,வெருகல் பிரதேச சபை வளாகம் போன்றவற்றில் வெள்ளநீர் தேங்கி நிற்பதை காணமுடிந்தது.வீடுகள், வயல் நிலங்கள் போன்றவற்றில் வெள்ளநீர் தேங்கி நிற்பதையும் அவதானிக்க முடிந்தது.வெருகல்-இலங்கைத்துறை முகத்துவார வீதியிலும் நீர் ஊடறுத்துச் செல்வதால் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளதோடு கடற்படையினர் படகு மூலம் மறு திசைக்கு கொண்டு செல்வதற்கான உதவிகளை செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement