• Oct 26 2024

அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் தேசிய பாதுகாப்பு குறித்து பேசி நாட்டை குழப்ப முயற்சி - சமன் வன்னியாராச்சிகே

Tharmini / Oct 26th 2024, 12:57 pm
image

Advertisement

சுமார் நூறு அமைச்சர்கள் இருந்த போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க முடியாதவர்கள், மூன்று அமைச்சர்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திய போது, தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் பொய்யான அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக இளம் வாக்காளர்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் கலாநிதி சமன் வன்னியாராச்சிகே.

ஊடகங்களுக்கு இன்று (26) கொழும்பில் கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் கலாநிதி சமன் வன்னி ஆராச்சிகே மேலும் கூறுகையில், இப்போது சிலர் தேசிய பாதுகாப்பு பற்றி கவலை தெரிவித்து பேசுகிறார்கள், குறிப்பாக வங்கரோத்தான எதிர்க்கட்சி அரசியல் குழுக்களின் மத்தியில் இக்கதை பரவலாக பேசப்பட்டு வருகிறது, காரணம் நாட்டை குழப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கவேயாகும்.

அதே போல அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு பயணத்தடை விதிக்கவில்லை. வெறும் எச்சரிக்கை மட்டுமேயிட்டது, ஆகவே அதனை இட்டு நாங்கள் குழப்பம் அடையத் தேவையில்லை. இந்ததகவல் அரசு புலனாய்வு அமைப்புகளுக்கும் கிடைத்துள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறியே உயிர்த்தஞாயிறு தாக்குதலை முன்னுக்கு கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன.  

இலங்கை அரசுக்கு தேவையான உளவுத்துறை அறிக்கை ஏற்கனவே கிடைத்துள்ளது. அரசு அதை ஆய்வு செய்ததோடு மட்டுமன்றி சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளது. இவ்வாறான நிலையில்தான் அமெரிக்கா இதைப் பற்றி தகவல் தெரிவித்தது.

இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுத்ததையிட்டு நாங்கள் பாராட்டு தெரிவிக்கின்றோம். அத்துடன் இன்று அமைச்சரவையில் அமர்ந்துள்ள மூவர் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த எதிர்கட்சிகள் சொல்வது போல் புலனாய்வுத் தகவல்களை வெளியிட வேண்டுமா? புலனாய்வு அறிக்கையை தினமும் படிக்க வேண்டுமா? அல்லது முகப்புத்தகம் போன்ற சமூக வலைதளங்களில் புலனாய்வுத் தகவல்களை சொல்ல விரும்புகிறீர்களா?

அத்தோடு எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு முன் தேசிய பாதுகாப்பு குறித்து மாயை ஏற்படுத்தி பொய்யான தகவல்களை கூறுகிறார்கள் நாட்டை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றார்கள்.

இன்றைய நிலையில் ஐம்பது பேரைக் கூட கூட்டங்களுக்கு வரவழைக்க முடியாத குழுக்கள் மீண்டும் இனவாதக் குரலைக் கொண்டுவர முயற்சிக்கின்றன என இளம் வாக்காளர்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் கலாநிதி சமன் வன்னியாராச்சிகே கருத்து தெரிவித்தார்.



அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் தேசிய பாதுகாப்பு குறித்து பேசி நாட்டை குழப்ப முயற்சி - சமன் வன்னியாராச்சிகே சுமார் நூறு அமைச்சர்கள் இருந்த போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க முடியாதவர்கள், மூன்று அமைச்சர்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திய போது, தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் பொய்யான அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக இளம் வாக்காளர்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் கலாநிதி சமன் வன்னியாராச்சிகே.ஊடகங்களுக்கு இன்று (26) கொழும்பில் கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் கலாநிதி சமன் வன்னி ஆராச்சிகே மேலும் கூறுகையில், இப்போது சிலர் தேசிய பாதுகாப்பு பற்றி கவலை தெரிவித்து பேசுகிறார்கள், குறிப்பாக வங்கரோத்தான எதிர்க்கட்சி அரசியல் குழுக்களின் மத்தியில் இக்கதை பரவலாக பேசப்பட்டு வருகிறது, காரணம் நாட்டை குழப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கவேயாகும்.அதே போல அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு பயணத்தடை விதிக்கவில்லை. வெறும் எச்சரிக்கை மட்டுமேயிட்டது, ஆகவே அதனை இட்டு நாங்கள் குழப்பம் அடையத் தேவையில்லை. இந்ததகவல் அரசு புலனாய்வு அமைப்புகளுக்கும் கிடைத்துள்ளது.தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறியே உயிர்த்தஞாயிறு தாக்குதலை முன்னுக்கு கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன.  இலங்கை அரசுக்கு தேவையான உளவுத்துறை அறிக்கை ஏற்கனவே கிடைத்துள்ளது. அரசு அதை ஆய்வு செய்ததோடு மட்டுமன்றி சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளது. இவ்வாறான நிலையில்தான் அமெரிக்கா இதைப் பற்றி தகவல் தெரிவித்தது.இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுத்ததையிட்டு நாங்கள் பாராட்டு தெரிவிக்கின்றோம். அத்துடன் இன்று அமைச்சரவையில் அமர்ந்துள்ள மூவர் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.இந்த எதிர்கட்சிகள் சொல்வது போல் புலனாய்வுத் தகவல்களை வெளியிட வேண்டுமா புலனாய்வு அறிக்கையை தினமும் படிக்க வேண்டுமா அல்லது முகப்புத்தகம் போன்ற சமூக வலைதளங்களில் புலனாய்வுத் தகவல்களை சொல்ல விரும்புகிறீர்களாஅத்தோடு எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு முன் தேசிய பாதுகாப்பு குறித்து மாயை ஏற்படுத்தி பொய்யான தகவல்களை கூறுகிறார்கள் நாட்டை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றார்கள்.இன்றைய நிலையில் ஐம்பது பேரைக் கூட கூட்டங்களுக்கு வரவழைக்க முடியாத குழுக்கள் மீண்டும் இனவாதக் குரலைக் கொண்டுவர முயற்சிக்கின்றன என இளம் வாக்காளர்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் கலாநிதி சமன் வன்னியாராச்சிகே கருத்து தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement