பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்திற்கு தயாராகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் உரைக்குப் பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்தார்.
பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சியால் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று சபையில் நளிந்த ஜயதிஸ்ஸ உரையாற்றினார். இதன்போதே எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவும் தனது கருத்தை முன்வைத்தார்.
சபையில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிக்கையில்,
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர். கல்வி அமைச்சர் என்ற வகையில் கல்வி அமைச்சினூடாக கல்வி மறுசீரமைப்பு முன்வைத்ததது தான் காரணம். இதனால் தான் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.
அரசாங்கம் என்ற வகையில் எதிர்வரும் வியாழன், வெள்ளி குறித்த விவாதத்திற்கு பதிலளிக்க எதிர்பார்க்கின்றோம். ஏதாவதொரு வகையில் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணை சம்பந்தமாக அந்த இரு நாட்களில் பிரேரணையை முன்வைக்கவில்லை என்றால் நாம் ஆளுந்தரப்பு என்ற வகையில் வியாழக்கிழமை கல்வி மறுசீரமைப்பு சம்பந்தமாக ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.
அதன்பின்னர் இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித்தலைவர்,
நம்பிக்கையில்லா பிரேரணையை நாம் சரியான முறையில் கையளிப்போம். நாம் ஆயத்தமாகவே உள்ளோம். கல்வி மறுசீரமைப்பு விவாதத்தை நீங்கள் நாளைக்கே ஆரம்பியுங்கள். நாங்கள் ஆயத்தமாகவுள்ளோம். அதற்கு நீங்கள் ஆயத்தமா? எனக் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
நாளை டித்வா சூறாவளி தொடர்பான விவாதம் உள்ளது. அகையால் கல்வி மறுசீரமைப்பு விவாதமா டித்வா சூறவாளி விவாதமா என்பதை நீங்களே முடிவு எடுக்க வேண்டும். நாம் இரண்டிற்கும் தயாராகவுள்ளோம் என சபாநாயகருக்குத் தெரிவித்தார்.
இறுதியாக அதற்குப் பதிலளித்த பிரதமர் நாமும் இரண்டிற்கும் தயாராகவுள்ளோம் எனத் தெரிவித்தார். இருவருக்குமிடையில் இடம்பெற்ற உரையால் சபையில் சிறிதுநேரம் குழப்பநிலை உருவாகியது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; விவாதத்திற்கு தயாரான எதிர்க்கட்சி பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்திற்கு தயாராகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் உரைக்குப் பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்தார். பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சியால் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று சபையில் நளிந்த ஜயதிஸ்ஸ உரையாற்றினார். இதன்போதே எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவும் தனது கருத்தை முன்வைத்தார். சபையில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிக்கையில், பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர். கல்வி அமைச்சர் என்ற வகையில் கல்வி அமைச்சினூடாக கல்வி மறுசீரமைப்பு முன்வைத்ததது தான் காரணம். இதனால் தான் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. அரசாங்கம் என்ற வகையில் எதிர்வரும் வியாழன், வெள்ளி குறித்த விவாதத்திற்கு பதிலளிக்க எதிர்பார்க்கின்றோம். ஏதாவதொரு வகையில் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணை சம்பந்தமாக அந்த இரு நாட்களில் பிரேரணையை முன்வைக்கவில்லை என்றால் நாம் ஆளுந்தரப்பு என்ற வகையில் வியாழக்கிழமை கல்வி மறுசீரமைப்பு சம்பந்தமாக ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார். அதன்பின்னர் இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித்தலைவர், நம்பிக்கையில்லா பிரேரணையை நாம் சரியான முறையில் கையளிப்போம். நாம் ஆயத்தமாகவே உள்ளோம். கல்வி மறுசீரமைப்பு விவாதத்தை நீங்கள் நாளைக்கே ஆரம்பியுங்கள். நாங்கள் ஆயத்தமாகவுள்ளோம். அதற்கு நீங்கள் ஆயத்தமா எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நாளை டித்வா சூறாவளி தொடர்பான விவாதம் உள்ளது. அகையால் கல்வி மறுசீரமைப்பு விவாதமா டித்வா சூறவாளி விவாதமா என்பதை நீங்களே முடிவு எடுக்க வேண்டும். நாம் இரண்டிற்கும் தயாராகவுள்ளோம் என சபாநாயகருக்குத் தெரிவித்தார். இறுதியாக அதற்குப் பதிலளித்த பிரதமர் நாமும் இரண்டிற்கும் தயாராகவுள்ளோம் எனத் தெரிவித்தார். இருவருக்குமிடையில் இடம்பெற்ற உரையால் சபையில் சிறிதுநேரம் குழப்பநிலை உருவாகியது.