• Sep 20 2024

சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிர்ப்பு..! யாழிலும் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு..!samugammedia

Sharmi / Jul 11th 2023, 11:40 am
image

Advertisement

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர  அண்மையில் நாடாளுமன்றத்தில் தமிழ் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்.சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள்  நீதிமன்றத்தில் முன்னிலையாகாது  இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக இன்றைய வழக்கு விசாரணைகள்   தவணையிடப்பட்டன.

அதேவேளை சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு  மாகாண சட்டத்தரணிகள் இன்றையதினம் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்காது இருக்க தீர்மானித்ததாக யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பா.தவபாலன் தெரிவித்தார்.

சரத் வீரசேகரவின் கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் அடையாள கண்டனப் பேரணியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கண்டனப் பேரணியில் எமது சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.




பருத்தித்துறை நீதிமன்றில் சட்டத்தரணிகள் பணி புறக்கணிப்பு......!


வெடுக்குநாறி மலையில் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் நடந்து கிண்டல், மற்றும் பாராளுமன்றில் நீதிபதியையும், நீதி துறையையும் அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்தமை ஆகியவற்றை கண்டித்து இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இதே வேளை பாராளுமன்ற உறுப்பினர்  சேகர வீரசேகர நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை, மற்றும் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்தமையை கண்டிப்பதாகவும் பருத்தித்துறை சட்டத்தரணிகள் சங்க செயலாளர் சட்டத்தரணி நடராசா ராஜீவன் தெரிவித்துள்ளார்.

இதனால் இன்றைய தினம் இடம் பெறவேண்டிய அனைத்து வழக்குகளுக்கும் தவணையிடப்பட்டுள்ளன.

சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிர்ப்பு. யாழிலும் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு.samugammedia நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர  அண்மையில் நாடாளுமன்றத்தில் தமிழ் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்.சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள்  நீதிமன்றத்தில் முன்னிலையாகாது  இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக இன்றைய வழக்கு விசாரணைகள்   தவணையிடப்பட்டன.அதேவேளை சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு  மாகாண சட்டத்தரணிகள் இன்றையதினம் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்காது இருக்க தீர்மானித்ததாக யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பா.தவபாலன் தெரிவித்தார்.சரத் வீரசேகரவின் கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் அடையாள கண்டனப் பேரணியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த கண்டனப் பேரணியில் எமது சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.பருத்தித்துறை நீதிமன்றில் சட்டத்தரணிகள் பணி புறக்கணிப்பு.வெடுக்குநாறி மலையில் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் நடந்து கிண்டல், மற்றும் பாராளுமன்றில் நீதிபதியையும், நீதி துறையையும் அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்தமை ஆகியவற்றை கண்டித்து இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.இதே வேளை பாராளுமன்ற உறுப்பினர்  சேகர வீரசேகர நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை, மற்றும் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்தமையை கண்டிப்பதாகவும் பருத்தித்துறை சட்டத்தரணிகள் சங்க செயலாளர் சட்டத்தரணி நடராசா ராஜீவன் தெரிவித்துள்ளார்.இதனால் இன்றைய தினம் இடம் பெறவேண்டிய அனைத்து வழக்குகளுக்கும் தவணையிடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement