• Sep 20 2024

நேட்டோவில் 32ஆவது நாடக இணையும் சுவீடன்..! துருக்கி அதிபர் பச்சைக்கொடி ..!samugammedia

Sharmi / Jul 11th 2023, 11:43 am
image

Advertisement

சுவீடன் நேட்டோ அமைப்பில் 32 ஆவது நாடக இணைவதற்கு துருக்கி அதிபர் எர்டோகன், சம்மதம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது  ரஷ்யா போர் தொடுத்தது முதல் அயல்  நாடுகள் தம்மை   பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.

ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ந்தும்  சண்டையிட்டு வரும் உக்ரைன், நேட்டோவில்  இணைவதற்கான ஏனைய நாடுகளின் ஆதரவுகளை கோரி வருகின்றது.
 
இந்நிலையில், கடந்த வாரம் துருக்கி சென்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி,  அந்நாட்டு அதிபர் எர்டோகனை சந்தித்த போது  உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு  எர்டோகன் ஆதரவு வழங்கியுள்ளார்.

இதற்கிடையே, சுவீடனும்  நேட்டோவில் இணைவதற்கு  விண்ணப்பித்திருந்த நிலையில், குர்திஷ் குழு, துருக்கி அரசுக்கு எதிரான ஆர்வலர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதால் துருக்கி தொடர்ந்தும் தடையை ஏற்படுத்தி வந்தது.

இவ்வாறான சுழலில், நேற்றைய தினம் துருக்கி அதிபர் எர்டோகன், சுவீடன் நேட்டோ அமைப்பில்  இணைய சம்மதம் தெரிவித்துள்ள போதிலும், துருக்கி நாடாளுமன்றத்தில் ஆதரவு பெற வேண்டும் எனவும் அதற்கான அழுத்தத்தை கொடுப்பதாகவும்  எர்டோகன் உறுதியளித்துள்ளார்.

துருக்கி அதிபர் எர்டோகன், சுவீடன் பிரதமர் கிரிஸ்டர்சன் மற்றும் நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சந்திப்பிற்கு பின்னரே இந்த முடிவை  துருக்கி எட்டியுள்ளது.

அந்த வகையில், துருக்கியின் இந்த முடிவை வரலாற்று நாள் என ஜோன்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  சுவீடன் இணைவது, நேட்டோ கூட்டணி நாடுகளின் பாதுகாப்பிற்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் பயனளிக்கும் எனவும் அடு  பாதுகாப்பு மற்றும் வலிமையை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில்,நேட்டோவில் இணையும் 32 ஆவது நாடு என்ற பெருமையினை  சுவீடன் பெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேட்டோவில் 32ஆவது நாடக இணையும் சுவீடன். துருக்கி அதிபர் பச்சைக்கொடி .samugammedia சுவீடன் நேட்டோ அமைப்பில் 32 ஆவது நாடக இணைவதற்கு துருக்கி அதிபர் எர்டோகன், சம்மதம் தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது  ரஷ்யா போர் தொடுத்தது முதல் அயல்  நாடுகள் தம்மை   பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ந்தும்  சண்டையிட்டு வரும் உக்ரைன், நேட்டோவில்  இணைவதற்கான ஏனைய நாடுகளின் ஆதரவுகளை கோரி வருகின்றது.  இந்நிலையில், கடந்த வாரம் துருக்கி சென்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி,  அந்நாட்டு அதிபர் எர்டோகனை சந்தித்த போது  உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு  எர்டோகன் ஆதரவு வழங்கியுள்ளார். இதற்கிடையே, சுவீடனும்  நேட்டோவில் இணைவதற்கு  விண்ணப்பித்திருந்த நிலையில், குர்திஷ் குழு, துருக்கி அரசுக்கு எதிரான ஆர்வலர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதால் துருக்கி தொடர்ந்தும் தடையை ஏற்படுத்தி வந்தது. இவ்வாறான சுழலில், நேற்றைய தினம் துருக்கி அதிபர் எர்டோகன், சுவீடன் நேட்டோ அமைப்பில்  இணைய சம்மதம் தெரிவித்துள்ள போதிலும், துருக்கி நாடாளுமன்றத்தில் ஆதரவு பெற வேண்டும் எனவும் அதற்கான அழுத்தத்தை கொடுப்பதாகவும்  எர்டோகன் உறுதியளித்துள்ளார். துருக்கி அதிபர் எர்டோகன், சுவீடன் பிரதமர் கிரிஸ்டர்சன் மற்றும் நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சந்திப்பிற்கு பின்னரே இந்த முடிவை  துருக்கி எட்டியுள்ளது. அந்த வகையில், துருக்கியின் இந்த முடிவை வரலாற்று நாள் என ஜோன்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். அத்துடன்,  சுவீடன் இணைவது, நேட்டோ கூட்டணி நாடுகளின் பாதுகாப்பிற்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் பயனளிக்கும் எனவும் அடு  பாதுகாப்பு மற்றும் வலிமையை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில்,நேட்டோவில் இணையும் 32 ஆவது நாடு என்ற பெருமையினை  சுவீடன் பெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement