இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டும் இதுவரை எமக்கான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என தீவக கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவரான ஆ.கனகசபை தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடலை நம்பி வாழும் எமது மீனவ சமூகத்தினர் இந்திய இழுவைப் படகுகள் தொடர்பில் நேரடியாக நாம் இந்தியாவிற்கு சென்று அங்குள்ள மீனவ மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.
இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பில் வந்து மீன்பிடியில் ஈடுபடுவதும் எமது கடற்படை அவர்களை கைது செய்வதும் மீண்டும் மீனவர்களை விடுவதுமாக இது எமக்கு ஒரு கண் துடைப்பு காட்சியாகவே காணப்படுகின்றது.
இந்திய இழுவைப் படகுகளால் எமது கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதோடு இது தொடர்ந்தால் தீவுப் பகுதி மற்றும் கரையோரத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் பட்டினிச் சாவை எதிர்நோக்க வேண்டிய நிலை வரும்.
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிராக கடற்றொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா தமது காலத்தில் நடவடிக்கை எடுக்காமல் விட்டால் கடற்றொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறும் எனவும் தெரிவித்தார்.
இந்திய இழுவைப்படகுகளால் எமது கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினிச்சாவை எதிர் நோக்கும் நிலை.கனகசபை ஆதங்கம்.samugammedia இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டும் இதுவரை எமக்கான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என தீவக கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவரான ஆ.கனகசபை தெரிவித்துள்ளார்.யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,கடலை நம்பி வாழும் எமது மீனவ சமூகத்தினர் இந்திய இழுவைப் படகுகள் தொடர்பில் நேரடியாக நாம் இந்தியாவிற்கு சென்று அங்குள்ள மீனவ மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பில் வந்து மீன்பிடியில் ஈடுபடுவதும் எமது கடற்படை அவர்களை கைது செய்வதும் மீண்டும் மீனவர்களை விடுவதுமாக இது எமக்கு ஒரு கண் துடைப்பு காட்சியாகவே காணப்படுகின்றது.இந்திய இழுவைப் படகுகளால் எமது கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதோடு இது தொடர்ந்தால் தீவுப் பகுதி மற்றும் கரையோரத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் பட்டினிச் சாவை எதிர்நோக்க வேண்டிய நிலை வரும்.இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிராக கடற்றொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா தமது காலத்தில் நடவடிக்கை எடுக்காமல் விட்டால் கடற்றொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறும் எனவும் தெரிவித்தார்.