• May 17 2024

இலங்கை ஐயப்ப பக்தர்களுக்கு தமிழகத்தில் ஏற்பட்ட அனர்த்தம் – 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Chithra / Jan 13th 2024, 3:02 pm
image

Advertisement

 


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இலங்கையில் இருந்து சென்னை சென்ற 3 பெண்கள் உட்பட 15 பேர் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் அவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று அதிகாலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா விஜயகோபாலபுரம் என்ற இடத்தில் சென்ற போது வேன் திடீரென பிரேக் டவுன்  ஆகியுள்ளது.

இதைடுத்து சாலையோரம் வேனை நிறுத்தி சாரதி பழுது பார்த்துக் கொண்டிருந்த போது பின்னால் வந்த மற்றொரு வேன் டிரைவரும் வண்டியை நிறுத்திவிட்டு, சென்னை வேன் சாரதிக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் இருந்து கம்பத்தை நோக்கி வந்த தனியார் பஸ் முன்னால் நின்ற சென்னை வேனில் பின்புறம் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து உடனடியாக 108 ஆம்புயூலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரச தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

காயமடைந்தவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த விபத்து குறித்து பாடாலூர் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இலங்கை ஐயப்ப பக்தர்களுக்கு தமிழகத்தில் ஏற்பட்ட அனர்த்தம் – 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி  சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இலங்கையில் இருந்து சென்னை சென்ற 3 பெண்கள் உட்பட 15 பேர் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் அவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்று அதிகாலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா விஜயகோபாலபுரம் என்ற இடத்தில் சென்ற போது வேன் திடீரென பிரேக் டவுன்  ஆகியுள்ளது.இதைடுத்து சாலையோரம் வேனை நிறுத்தி சாரதி பழுது பார்த்துக் கொண்டிருந்த போது பின்னால் வந்த மற்றொரு வேன் டிரைவரும் வண்டியை நிறுத்திவிட்டு, சென்னை வேன் சாரதிக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.இந்நிலையில் சென்னையில் இருந்து கம்பத்தை நோக்கி வந்த தனியார் பஸ் முன்னால் நின்ற சென்னை வேனில் பின்புறம் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.இதையடுத்து உடனடியாக 108 ஆம்புயூலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரச தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பாடாலூர் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement