• Dec 04 2024

எமது கட்சி ஆமை போன்றது; அமைதியாக வெற்றிகளைப் பெறும்..! மொட்டு எம்.பி சூளுரை

Chithra / Feb 26th 2024, 8:15 am
image


பொதுஜன பெரமுன கட்சி ஆமை போன்றது, அமைதியாக வெற்றிகளைப் பெறும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயமாக வெற்றி பெறும்.

தற்போதைய நிலையில் பொதுஜன பெரமுன கட்சி அமைதியாக இருக்கின்றது.

ஆனால் எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக எங்கள் கட்சியை நாங்கள் அமைதியாக பலப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். 

அதனை அறியாத பல்வேறு கட்சிகள் எதிர்வரும் தேர்தல்களில் தாங்களே வெற்றி பெறுவோம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் உண்மை என்னவென்றால் தற்போதைய நிலைமை ஆமைக்கும் முயலுக்கும் இடையிலான ஓட்டப் பந்தயத்தைப் போன்றது. 

பந்தயத்தின் தொடக்கத்தில் முயல் முன்னிலையில் இருந்த போதிலும் இறுதியில் ஆமை வென்றது போன்று மொட்டு கட்சியும் இறுதியில் வெற்றி பெறும்.

நாட்டுப்புறக் கதையில் பந்தயத்தின் நடுவில் முயல் உறங்கியதே அது தோற்கடிக்கப்பட்டதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றது.

ஆனால் உண்மையில் போட்டியில் வெற்றி பெறுவதற்கு ஆமைக்கே உரித்தான உத்திகள் இருந்தமையால் ஆமை வென்றது என தெரிவித்துள்ளார்.


எமது கட்சி ஆமை போன்றது; அமைதியாக வெற்றிகளைப் பெறும். மொட்டு எம்.பி சூளுரை பொதுஜன பெரமுன கட்சி ஆமை போன்றது, அமைதியாக வெற்றிகளைப் பெறும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயமாக வெற்றி பெறும்.தற்போதைய நிலையில் பொதுஜன பெரமுன கட்சி அமைதியாக இருக்கின்றது.ஆனால் எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக எங்கள் கட்சியை நாங்கள் அமைதியாக பலப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அதனை அறியாத பல்வேறு கட்சிகள் எதிர்வரும் தேர்தல்களில் தாங்களே வெற்றி பெறுவோம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் உண்மை என்னவென்றால் தற்போதைய நிலைமை ஆமைக்கும் முயலுக்கும் இடையிலான ஓட்டப் பந்தயத்தைப் போன்றது. பந்தயத்தின் தொடக்கத்தில் முயல் முன்னிலையில் இருந்த போதிலும் இறுதியில் ஆமை வென்றது போன்று மொட்டு கட்சியும் இறுதியில் வெற்றி பெறும்.நாட்டுப்புறக் கதையில் பந்தயத்தின் நடுவில் முயல் உறங்கியதே அது தோற்கடிக்கப்பட்டதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றது.ஆனால் உண்மையில் போட்டியில் வெற்றி பெறுவதற்கு ஆமைக்கே உரித்தான உத்திகள் இருந்தமையால் ஆமை வென்றது என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement