உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சுமார் 70,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும், சுமார் 10,000 வேட்பாளர்கள் மாத்திரமே நேரடி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.
கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் மக்கள் மற்றும் வேட்பாளர்களின் ஆர்வம் குறைவடைந்துள்ளதோடு, பிரசாரங்களும் மந்தகதியிலேயே இடம்பெறுவதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவினால் அமைதிக்காலம் அறிவிக்கப்பட்டாலும் சிலர் இறுதி நேரத்தில் கூட சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றின் ஊடாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முயற்சிப்பர்.
அல்லது அரசியல் கட்சிகளால் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக் கூடும். தேர்தல் முடிவுகள் வெளியாகி வெற்றி பெறுபவர்களுக்கு இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகள் பாதகமாக அமையக் கூடும்.
எனவே அமைதி காலத்தில் எந்த வகையிலும் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம். என்றார்.
70,000 வேட்பாளர்களில் 10,000 பேர் மாத்திரமே பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர் வெளியான தகவல் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சுமார் 70,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும், சுமார் 10,000 வேட்பாளர்கள் மாத்திரமே நேரடி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் மக்கள் மற்றும் வேட்பாளர்களின் ஆர்வம் குறைவடைந்துள்ளதோடு, பிரசாரங்களும் மந்தகதியிலேயே இடம்பெறுவதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவினால் அமைதிக்காலம் அறிவிக்கப்பட்டாலும் சிலர் இறுதி நேரத்தில் கூட சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றின் ஊடாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முயற்சிப்பர்.அல்லது அரசியல் கட்சிகளால் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக் கூடும். தேர்தல் முடிவுகள் வெளியாகி வெற்றி பெறுபவர்களுக்கு இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகள் பாதகமாக அமையக் கூடும்.எனவே அமைதி காலத்தில் எந்த வகையிலும் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம். என்றார்.