அனுராதபுரம் மாவட்டம், மிகிந்தலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு மேற்படி இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள், மிகிந்தலை பகுதியில் எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது பலத்த காயமடைந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதிவேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தியமை விபத்துக்குக் காரணமா அல்லது இயந்திரக் கோளாறுகள் ஏதும் காணப்பட்டதா என்பது குறித்து மிகிந்தலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் - இளைஞர் சாவு அனுராதபுரம் மாவட்டம், மிகிந்தலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு மேற்படி இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள், மிகிந்தலை பகுதியில் எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது பலத்த காயமடைந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.இவ்விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.அதிவேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தியமை விபத்துக்குக் காரணமா அல்லது இயந்திரக் கோளாறுகள் ஏதும் காணப்பட்டதா என்பது குறித்து மிகிந்தலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.