• Jan 19 2026

கட்டுப்பாட்டையிழந்த வான் தூணுடன் மோதி வபத்து!

shanuja / Jan 17th 2026, 4:10 pm
image


வேகக் கட்டுப்பாட்டை இழந்த வான் வீதியை விட்டு விலகி  தூண் மற்றும் வேலி மீது மோதி  விபத்திற்குள்ளாகியுள்ளது. 


இந்த விபத்துச் சம்பவம் வட்டுக்கோட்டை - மாவடி சந்தி பகுதியில்  இன்றையதினம்  இடம்பெற்றுள்ளது.


இது குறித்து மேலும் தெரிய வருகையில்,


மூளாயிலிருந்து வந்த வான் மாவடி சந்தி ஊடாக சித்தங்கேணி நோக்கி பயணிப்பதற்காக திரும்பியுள்ளது.


இதன்போது கட்டுப்படுத்த முடியாத வேகம் காரணமாக சித்தங்கேணி பக்கம் திரும்பிய வாகனம் வலது பக்கத்துக்கு மாறி வீதியோரத்தில் இருந்த தூண் மற்றும் வேலி மீது மோதி விபத்திற்குள்ளாகியது.


விபத்தில் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படாவிட்டாலும் தூண், வேலி மற்றும் வான் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. 


விபத்து தொடர்பாக  வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கட்டுப்பாட்டையிழந்த வான் தூணுடன் மோதி வபத்து வேகக் கட்டுப்பாட்டை இழந்த வான் வீதியை விட்டு விலகி  தூண் மற்றும் வேலி மீது மோதி  விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் வட்டுக்கோட்டை - மாவடி சந்தி பகுதியில்  இன்றையதினம்  இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரிய வருகையில்,மூளாயிலிருந்து வந்த வான் மாவடி சந்தி ஊடாக சித்தங்கேணி நோக்கி பயணிப்பதற்காக திரும்பியுள்ளது.இதன்போது கட்டுப்படுத்த முடியாத வேகம் காரணமாக சித்தங்கேணி பக்கம் திரும்பிய வாகனம் வலது பக்கத்துக்கு மாறி வீதியோரத்தில் இருந்த தூண் மற்றும் வேலி மீது மோதி விபத்திற்குள்ளாகியது.விபத்தில் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படாவிட்டாலும் தூண், வேலி மற்றும் வான் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. விபத்து தொடர்பாக  வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement