• Nov 26 2024

பொலிஸாரால் அகற்றப்பட்ட 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத சுவரொட்டிகள்!

Chithra / Sep 17th 2024, 2:20 pm
image


ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டவிரோதமாக ஒட்டப்பட்ட ஆறு இலட்சத்து 27 ஆயிரத்து 300 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.           

இந்நிலையில், 7,900 சுவரொட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.    

இதேவேளை, 1,500 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதுடன் 1,100 பேனர்கள் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மொத்தம் 1,550 கட்அவுட்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளதுடன் 1,600 கட்அவுட்கள் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. 

மேலும், 7,600 விளம்பரங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ள நிலையில் 10,750 விளம்பரங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.   

கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி முதல் நேற்று (16) வரையான காலப்பகுதிக்குள் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

பொலிஸாரால் அகற்றப்பட்ட 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத சுவரொட்டிகள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டவிரோதமாக ஒட்டப்பட்ட ஆறு இலட்சத்து 27 ஆயிரத்து 300 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.           இந்நிலையில், 7,900 சுவரொட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.    இதேவேளை, 1,500 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதுடன் 1,100 பேனர்கள் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மொத்தம் 1,550 கட்அவுட்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளதுடன் 1,600 கட்அவுட்கள் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 7,600 விளம்பரங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ள நிலையில் 10,750 விளம்பரங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.   கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி முதல் நேற்று (16) வரையான காலப்பகுதிக்குள் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement