• Jan 12 2025

பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்!

Chithra / Jan 7th 2025, 9:49 am
image

 

பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தற்போது நெல் களஞ்சியசாலைகளைச் சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று இலட்சம் மெற்றிக் டன் நெல் களஞ்சியப்படுத்தக் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன் நெல் சந்தைப்படுத்தல் சபை உள்ளிட்ட வர்த்தக அமைச்சுக்குச் சொந்தமான கட்டடங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.

பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்  பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது.நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த இதனைத் தெரிவித்துள்ளார்.இதற்கமைய, தற்போது நெல் களஞ்சியசாலைகளைச் சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மூன்று இலட்சம் மெற்றிக் டன் நெல் களஞ்சியப்படுத்தக் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அத்துடன் நெல் சந்தைப்படுத்தல் சபை உள்ளிட்ட வர்த்தக அமைச்சுக்குச் சொந்தமான கட்டடங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement