• May 11 2026

கிட்ஸ் கிரியேட்டிவ் ஆர்ட்ஸின் ஓவிய கண்காட்சி

shanu / Nov 8th 2025, 7:02 pm
image

கிட்ஸ் கிரியேட்டிவ் ஆர்ட்ஸின் சிறுவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவிய கண்காட்சி இன்றையதினம் வவுனியா மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.


சிறார்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் நோக்காகக் கொண்டு இடம்பெற்ற இவ் ஓவியக் கண்காட்சியில் பல்வேறு ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.


ஓவியக் கண்காட்சியில் கலை,கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன். சிறுவர்களின் கைவண்ணத்தில் அமைந்து அனைத்து ஓவியங்களும் பார்ப்பவர்கள் அனைவரினதும் கண்களைக் கவர்ந்துள்ளன. 


நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ் பல்கலைக்கழக கட்புட ஆற்றுகைக்கலை பீடத்தின் பீடாதிபதி ரி.றொபேட் அருட்சேகரம் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், பொது அமைப்பினர், சிறார்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கிட்ஸ் கிரியேட்டிவ் ஆர்ட்ஸின் ஓவிய கண்காட்சி கிட்ஸ் கிரியேட்டிவ் ஆர்ட்ஸின் சிறுவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவிய கண்காட்சி இன்றையதினம் வவுனியா மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.சிறார்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் நோக்காகக் கொண்டு இடம்பெற்ற இவ் ஓவியக் கண்காட்சியில் பல்வேறு ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.ஓவியக் கண்காட்சியில் கலை,கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன். சிறுவர்களின் கைவண்ணத்தில் அமைந்து அனைத்து ஓவியங்களும் பார்ப்பவர்கள் அனைவரினதும் கண்களைக் கவர்ந்துள்ளன. நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ் பல்கலைக்கழக கட்புட ஆற்றுகைக்கலை பீடத்தின் பீடாதிபதி ரி.றொபேட் அருட்சேகரம் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், பொது அமைப்பினர், சிறார்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement