• Oct 19 2024

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பங்குனி திங்கள் திருவிழா! samugammedia

Sharmi / Apr 10th 2023, 2:34 pm
image

Advertisement

வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பங்குனி நான்காம் திங்கள் திருவிழா வெகு விமர்சையாக இடம்பெற்றது.


இன்று அதிகாலை பக்த அடியவர்கள் அம்மனுடைய தீர்த்தகேணியில் நீராடி பன்றித்தலைச்சி அம்மனுக்கு பொங்கல் பொங்கியும் அம்மனுக்கு பிடித்த உணவான கஞ்சி    
சமைத்தும் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

பால்குட பவனி எடுத்தல்,ஆட்டக்காவடி ,தூக்கு காவடி,தீச்சட்டி எடுத்தல் என பக்த அடியார்கள் தங்களுடைய நேர்த்திக்கடன் களை செலுத்தியிருந்ததனை அவதானிக்க முடிந்தது.

அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை வாழ்த்து தோத்திரம் என ஆகமமுறைப்படி வசந்த மண்டப பூஜை ஆரம்பமாகி பன்றித்தலைச்சி அம்மன் உள்வீதியுலா வருகை தந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்திருந்தார்.


பன்றித்தலைச்சி  அம்மன் ஆலயத்திற்கு நாட்டின் அனைத்து பாகங்களிலும் இருந்து பக்த அடியவர்கள் வருகை தருகின்ற அதே வேளையில் இலங்கை பாதுகாப்பு படை மற்றும் சாரணர் இயக்கம் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதையும் அவதானிக்க முடிகின்றது.





மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பங்குனி திங்கள் திருவிழா samugammedia வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பங்குனி நான்காம் திங்கள் திருவிழா வெகு விமர்சையாக இடம்பெற்றது. இன்று அதிகாலை பக்த அடியவர்கள் அம்மனுடைய தீர்த்தகேணியில் நீராடி பன்றித்தலைச்சி அம்மனுக்கு பொங்கல் பொங்கியும் அம்மனுக்கு பிடித்த உணவான கஞ்சி    சமைத்தும் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.பால்குட பவனி எடுத்தல்,ஆட்டக்காவடி ,தூக்கு காவடி,தீச்சட்டி எடுத்தல் என பக்த அடியார்கள் தங்களுடைய நேர்த்திக்கடன் களை செலுத்தியிருந்ததனை அவதானிக்க முடிந்தது.அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை வாழ்த்து தோத்திரம் என ஆகமமுறைப்படி வசந்த மண்டப பூஜை ஆரம்பமாகி பன்றித்தலைச்சி அம்மன் உள்வீதியுலா வருகை தந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்திருந்தார்.பன்றித்தலைச்சி  அம்மன் ஆலயத்திற்கு நாட்டின் அனைத்து பாகங்களிலும் இருந்து பக்த அடியவர்கள் வருகை தருகின்ற அதே வேளையில் இலங்கை பாதுகாப்பு படை மற்றும் சாரணர் இயக்கம் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதையும் அவதானிக்க முடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement