இன்றைய அரசாங்கத்தில் பாராளுமன்றத்தினை நோக்கினால் வேடிக்கை நிறைந்த பாராளுமன்றமாக இருக்கின்றது. இன்று பாராளுமன்றில் வற்வரி தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் இம்ரான் மஃறூப் தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றில் இடம்பெற்ற உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகைதந்திருந்தார். ஜனாதிபதி ஆற்றியவுரையில் பெரும் நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் இந்த நாட்டினைப் பொறுப்பெடுத்துத் தான் இன்றைய நெருக்கடியற்ற சுமூகமான நிலைக்கு மாற்றியதாக குறிப்பிட்டார்.
நாட்டினை நல்ல நிலைக்கு கொண்டுவந்திருப்பதாக ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால் மக்களின் வாழ்கையினை எடுத்துப்பார்த்தால் நெருக்கடியான காலத்தில் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் இப்போது நெருக்கடியற்ற காலத்தில் மாறியிருக்கின்றதா என ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். ஆனால் இன்றைய நிலையில் மக்கள் பொருளாதார ரீதியில் பெரும் துயரத்தினை அனுபவிக்கின்றனர். தமது அன்றாட தேவைகளை பூர்த்திசெய்யமுடியாத நிலையில் மக்கள் காணப்படுகின்றனர்.
பாராளுமன்றைப் பார்த்தால் ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் எதிர்த்தரப்போடு நிற்கின்றனர். எதிர்த்தரப்போடு நிற்பவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர். ஒருபோதும் இல்லாத வேடிக்கை இந்தப் பாராளுமன்றில் நடக்கின்றது.
இதுவரைகாலமும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகள் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போதய ஆளுந்தரப்பினர் எதிர்கட்சி உறுப்பினர்களுடைய நிதியையும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் ஊடாகவே மேற்கொள்ளவுள்ளதாக கூறுகின்றனர். இது வேடிக்கையாக இருக்கின்றது.
பசில் ராஜபக்ஷ வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து நாட்டுக்கு மீண்டும் வந்தால் போரில் வெற்றிகொண்ட தலைவரை வரவேற்பது போல் திரண்டு சென்று வரவேற்கின்றனர். இவர்கள் தான் நாட்டை அழித்தவர்கள் இவர்களால் தான் நாட்டிற்கு இந்த நிலை இவர்களை மக்களை திரட்டி வரவேற்கின்றனர். என்றார்.
இந்த அரசாங்கத்தில் பாரளுமன்றம் வேடிக்கையானதாக மாறியிருக்கின்றது- பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃறூப் தெரிவிப்பு. இன்றைய அரசாங்கத்தில் பாராளுமன்றத்தினை நோக்கினால் வேடிக்கை நிறைந்த பாராளுமன்றமாக இருக்கின்றது. இன்று பாராளுமன்றில் வற்வரி தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் இம்ரான் மஃறூப் தெரிவித்தார்.இன்று பாராளுமன்றில் இடம்பெற்ற உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இன்று ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகைதந்திருந்தார். ஜனாதிபதி ஆற்றியவுரையில் பெரும் நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் இந்த நாட்டினைப் பொறுப்பெடுத்துத் தான் இன்றைய நெருக்கடியற்ற சுமூகமான நிலைக்கு மாற்றியதாக குறிப்பிட்டார். நாட்டினை நல்ல நிலைக்கு கொண்டுவந்திருப்பதாக ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால் மக்களின் வாழ்கையினை எடுத்துப்பார்த்தால் நெருக்கடியான காலத்தில் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் இப்போது நெருக்கடியற்ற காலத்தில் மாறியிருக்கின்றதா என ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். ஆனால் இன்றைய நிலையில் மக்கள் பொருளாதார ரீதியில் பெரும் துயரத்தினை அனுபவிக்கின்றனர். தமது அன்றாட தேவைகளை பூர்த்திசெய்யமுடியாத நிலையில் மக்கள் காணப்படுகின்றனர். பாராளுமன்றைப் பார்த்தால் ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் எதிர்த்தரப்போடு நிற்கின்றனர். எதிர்த்தரப்போடு நிற்பவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர். ஒருபோதும் இல்லாத வேடிக்கை இந்தப் பாராளுமன்றில் நடக்கின்றது. இதுவரைகாலமும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகள் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போதய ஆளுந்தரப்பினர் எதிர்கட்சி உறுப்பினர்களுடைய நிதியையும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் ஊடாகவே மேற்கொள்ளவுள்ளதாக கூறுகின்றனர். இது வேடிக்கையாக இருக்கின்றது.பசில் ராஜபக்ஷ வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து நாட்டுக்கு மீண்டும் வந்தால் போரில் வெற்றிகொண்ட தலைவரை வரவேற்பது போல் திரண்டு சென்று வரவேற்கின்றனர். இவர்கள் தான் நாட்டை அழித்தவர்கள் இவர்களால் தான் நாட்டிற்கு இந்த நிலை இவர்களை மக்களை திரட்டி வரவேற்கின்றனர். என்றார்.