• Dec 17 2024

பாராளுமன்றம் இன்று கூடுகிறது..!

Sharmi / Dec 17th 2024, 8:50 am
image

பாராளுமன்றம் இன்றும்(17) நாளையதினமும்(18) கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்றையதினம்(17)  மு.ப 9.30 மணிக்குக் கூடியதன் பின்னர் அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய முதலில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறவிருப்பதுடன், இதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகரின் தெரிவு இடம்பெறவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் பெயரிடப்பட்ட  தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூவரும், புதிய ஜனநாயக முன்னணியினால் பெயரிடப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இவ்வாறு பதவிச்சத்தியம் செய்யவுள்ளனர். இதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் தெரிவுக்காகவும், அதன் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மு.ப 11.00 மணி முதல் பி.ப 3.00 மணிவரை பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்வது தொடர்பான குறைநிரப்பு தொகை மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நாளையதினமும்(18) மீண்டும் இந்த விவாதம் தொடரவுள்ளது. 

இதற்கு அமைய முன்னர் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய 2024 வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் குறைநிரப்புத் தொகை மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பாராளுமன்றம் இன்று கூடுகிறது. பாராளுமன்றம் இன்றும்(17) நாளையதினமும்(18) கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் இன்றையதினம்(17)  மு.ப 9.30 மணிக்குக் கூடியதன் பின்னர் அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய முதலில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறவிருப்பதுடன், இதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகரின் தெரிவு இடம்பெறவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியினால் பெயரிடப்பட்ட  தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூவரும், புதிய ஜனநாயக முன்னணியினால் பெயரிடப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இவ்வாறு பதவிச்சத்தியம் செய்யவுள்ளனர். இதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் தெரிவுக்காகவும், அதன் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, மு.ப 11.00 மணி முதல் பி.ப 3.00 மணிவரை பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்வது தொடர்பான குறைநிரப்பு தொகை மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நாளையதினமும்(18) மீண்டும் இந்த விவாதம் தொடரவுள்ளது. இதற்கு அமைய முன்னர் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய 2024 வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் குறைநிரப்புத் தொகை மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement