• Nov 28 2024

நள்ளிரவுடன் ஒத்தி வைக்கப்படும் நாடாளுமன்ற அமர்வு..!samugammedia

mathuri / Jan 26th 2024, 6:20 am
image

இன்று (26.01.2024) நள்ளிரவுடன்  நாடாளுமன்ற அமர்வினை ஒத்தி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு நிறைவுபெறுவதோடு கோப், கோபா உள்ளிட்ட நாடாளுமன்ற குழுக்கள் அனைத்தும் நிறுத்தப்படும்.

அதேவேளை, நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதன் பின்னர், எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளது.

தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்ட பின் நாடாளுமன்ற குழுக்களின் புதிய தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்கள் மீண்டும் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர். இதன்போது, முன்னைய தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 


நள்ளிரவுடன் ஒத்தி வைக்கப்படும் நாடாளுமன்ற அமர்வு.samugammedia இன்று (26.01.2024) நள்ளிரவுடன்  நாடாளுமன்ற அமர்வினை ஒத்தி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.அவ்வாறு, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு நிறைவுபெறுவதோடு கோப், கோபா உள்ளிட்ட நாடாளுமன்ற குழுக்கள் அனைத்தும் நிறுத்தப்படும்.அதேவேளை, நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதன் பின்னர், எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளது.தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்ட பின் நாடாளுமன்ற குழுக்களின் புதிய தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்கள் மீண்டும் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர். இதன்போது, முன்னைய தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement