• May 09 2025

நாடாளுமன்றத் தேர்தல்; கட்சியின் செயலாளர்களை நாளை சந்திக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு!

Chithra / Oct 14th 2024, 11:13 am
image

 

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் நாளை காலை 9.30 மணிக்கு கொழும்பு, ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணையகத்தில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் அரசியல் கட்சி செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை சந்திப்பது இதுவே முதல் முறை.

இதன்போது, தேர்தல் காலத்தில் ஒரு வேட்பாளருக்கு செலவிடப்படும் குறைந்தபட்ச தொகையும் நாளை தீர்மானிக்கப்பட உள்ளது.

அதையடுத்து இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இது தவிர நாடாளுமன்றத் தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல்; கட்சியின் செயலாளர்களை நாளை சந்திக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை நடைபெறவுள்ளது.இந்த கலந்துரையாடல் நாளை காலை 9.30 மணிக்கு கொழும்பு, ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணையகத்தில் நடைபெறவுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் அரசியல் கட்சி செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை சந்திப்பது இதுவே முதல் முறை.இதன்போது, தேர்தல் காலத்தில் ஒரு வேட்பாளருக்கு செலவிடப்படும் குறைந்தபட்ச தொகையும் நாளை தீர்மானிக்கப்பட உள்ளது.அதையடுத்து இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.இது தவிர நாடாளுமன்றத் தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now