• Nov 13 2025

கிளிநொச்சியில் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம். கிலோ ஒன்றின் விலை 200 ரூபாய். இன்று முதல் கொள்வனவு

dorin / Nov 11th 2025, 7:54 pm
image

கரைச்சி பிரதேச சபை எல்லைக்குள் குறிப்பாக நகரத்திலும் நகரத்தை சூழ்ந்துள்ள பகுதிகளிலும் படர்ந்து உள்ள   மண்வளத்தை உறிஞ்சி அழிக்கும் பாத்தீனியத்தை  அழித்து ஒழிப்பதற்கான தீர்மானம் கரைச்சி பிரதேச  சபையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

அதன்படி சூழலில் காணப்படுகின்ற பார்த்தீனிய செடிகளை வேருடன் பிடுங்கி பிரதேச சபை அலுவலகத்தில் கையளிக்கின்ற ஒவ்வொரு கிலோ பாத்தீனியத்துக்கும் இருநூறு ரூபா வழங்கப்படும் இந்நடவடிக்கையானது இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்படுகிறது .

பிடுங்குகின்ற போது கைகளில் கையுறை அல்லது  ஷெப்பிங் பை போன்ற பாதுகாப்பு கையுறைகளை அணிந்து அதனை அகற்றுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

வேருடன் கொண்டு வரப்படுகின்ற செடிகளுக்கு மாத்திரமே பணம் வழங்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம். கிலோ ஒன்றின் விலை 200 ரூபாய். இன்று முதல் கொள்வனவு கரைச்சி பிரதேச சபை எல்லைக்குள் குறிப்பாக நகரத்திலும் நகரத்தை சூழ்ந்துள்ள பகுதிகளிலும் படர்ந்து உள்ள   மண்வளத்தை உறிஞ்சி அழிக்கும் பாத்தீனியத்தை  அழித்து ஒழிப்பதற்கான தீர்மானம் கரைச்சி பிரதேச  சபையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது .அதன்படி சூழலில் காணப்படுகின்ற பார்த்தீனிய செடிகளை வேருடன் பிடுங்கி பிரதேச சபை அலுவலகத்தில் கையளிக்கின்ற ஒவ்வொரு கிலோ பாத்தீனியத்துக்கும் இருநூறு ரூபா வழங்கப்படும் இந்நடவடிக்கையானது இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்படுகிறது .பிடுங்குகின்ற போது கைகளில் கையுறை அல்லது  ஷெப்பிங் பை போன்ற பாதுகாப்பு கையுறைகளை அணிந்து அதனை அகற்றுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.வேருடன் கொண்டு வரப்படுகின்ற செடிகளுக்கு மாத்திரமே பணம் வழங்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement