• Nov 19 2024

சர்வதேச சதுரங்க போட்டியில் பங்குபற்றிய : ஒன்பது வயது சிறுமி

Tharmini / Nov 18th 2024, 3:16 pm
image

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி  ஜெகதீசன் நிவாஷ்னி,

2023/24 தேசிய இளம் வீரர்கள் சதுரங்க சாம்பியன்ஷிப் (National Youth Chess Championship) போட்டியில்,

425 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு 29ஆவது இடத்தைப் பெற்று மெரிட் தரத்தை பெற்றுள்ளார் . 

இது திருகோணமலையின் சதுரங்க வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையாகும். 

இந்த போட்டி 2023ஆணண்டுஈண்டு 2023ஆம் ஆண்டு டிசெம்பர்  27 முதல் 30 வரை பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் நடைபெற்றது. 

09 சுற்று சுவிஸ் முறையில் நடந்த இப்போட்டியை ஸ்ரீலங்கா சதுரங்க சம்மேளனம்(Chess Federation of Sri Lanka) ஒழுங்கு செய்தது.

இதனை தொடர்ந்து, நிவாஷ்னி, 2024 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சர்வதேச போட்டியானா , 

பொதுநலவாய இளம் வீரர்கள் சதுரங்க விளையாட்டுகளில் (Commonwealth Youth Chess Championship 2024 - Under 10 Girls) classic, Rapid, Blitz சதுரங்க போட்டி வகைகளில் பங்கேற்று, சர்வதேச சதுரங்க போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் திருகோணமலை வீராங்கனையாகியுள்ளார்.

இந்த போட்டி August 28 முதல் September 5, 2024 வரை வாஸ்கடுவா Citrus Hotel-இல் நடைபெற்றது.

இதை இலங்கை சதுரங்க சம்மேளனம்(Chess Federation of Sri Lanka) ,Commonwealth Chess Association (CCA) மற்றும் FIDE சார்பில் நடத்தியது.

இந்த சாதனையின் மூலம் செல்வி நிவாஷ்ணி, திருகோணமலை மண்ணுக்கும் ,

அவரது பாடசாலைக்கும், அவருக்கு அடிப்படையில் இருந்து சதுரங்கத்தை பயிற்றுவித்த Trinco Chess Academy க்கும் பெருமை சேர்த்துள்ளார்.





சர்வதேச சதுரங்க போட்டியில் பங்குபற்றிய : ஒன்பது வயது சிறுமி திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி  ஜெகதீசன் நிவாஷ்னி,2023/24 தேசிய இளம் வீரர்கள் சதுரங்க சாம்பியன்ஷிப் (National Youth Chess Championship) போட்டியில், 425 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு 29ஆவது இடத்தைப் பெற்று மெரிட் தரத்தை பெற்றுள்ளார் . இது திருகோணமலையின் சதுரங்க வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையாகும். இந்த போட்டி 2023ஆணண்டுஈண்டு 2023ஆம் ஆண்டு டிசெம்பர்  27 முதல் 30 வரை பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் நடைபெற்றது. 09 சுற்று சுவிஸ் முறையில் நடந்த இப்போட்டியை ஸ்ரீலங்கா சதுரங்க சம்மேளனம்(Chess Federation of Sri Lanka) ஒழுங்கு செய்தது.இதனை தொடர்ந்து, நிவாஷ்னி, 2024 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சர்வதேச போட்டியானா , பொதுநலவாய இளம் வீரர்கள் சதுரங்க விளையாட்டுகளில் (Commonwealth Youth Chess Championship 2024 - Under 10 Girls) classic, Rapid, Blitz சதுரங்க போட்டி வகைகளில் பங்கேற்று, சர்வதேச சதுரங்க போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் திருகோணமலை வீராங்கனையாகியுள்ளார்.இந்த போட்டி August 28 முதல் September 5, 2024 வரை வாஸ்கடுவா Citrus Hotel-இல் நடைபெற்றது. இதை இலங்கை சதுரங்க சம்மேளனம்(Chess Federation of Sri Lanka) ,Commonwealth Chess Association (CCA) மற்றும் FIDE சார்பில் நடத்தியது.இந்த சாதனையின் மூலம் செல்வி நிவாஷ்ணி, திருகோணமலை மண்ணுக்கும் , அவரது பாடசாலைக்கும், அவருக்கு அடிப்படையில் இருந்து சதுரங்கத்தை பயிற்றுவித்த Trinco Chess Academy க்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement