இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குருணாகல் மாநகர சபை பிரதி மேயர் அஷார்டீன் மொய்னுதீனின் கட்சி உறுப்புரிமை உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) சார்பில் மாநகர சபைக்கு தெரிவாகியிருந்தார். பின்னர் மாநகர சபையில் ஆட்சி அமைக்கும் போது தேசிய மக்கள் சக்திக்கு (NPP) ஆதரவு வழங்கி பிரதி மேயராக பதவியேற்றிருந்தார்.
குருணாகல் பேருந்து நிலையம் மற்றும் பொது மலசலக்கூட சுத்திகரிப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக 30 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இலஞ்ச பணத்தை பெற முயன்ற போது நேற்று (08) பத்தரமுல்லை பகுதியில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட அஷார்டீன் மொய்னுதீன் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குருணாகல் மாநகர சபை பிரதி மேயர் அஷார்டீன் மொய்னுதீனின் கட்சி உறுப்புரிமை உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) சார்பில் மாநகர சபைக்கு தெரிவாகியிருந்தார். பின்னர் மாநகர சபையில் ஆட்சி அமைக்கும் போது தேசிய மக்கள் சக்திக்கு (NPP) ஆதரவு வழங்கி பிரதி மேயராக பதவியேற்றிருந்தார்.குருணாகல் பேருந்து நிலையம் மற்றும் பொது மலசலக்கூட சுத்திகரிப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக 30 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, இலஞ்ச பணத்தை பெற முயன்ற போது நேற்று (08) பத்தரமுல்லை பகுதியில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.