• May 12 2026

சசி வீரவங்சவுக்கு எதிரான கடவுச்சிட்டு வழக்கு ஒத்திவைப்பு

dorin / May 11th 2026, 8:43 pm
image

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, முறையற்ற வகையில் இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவங்சவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை, வரும் 25 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதியான சசி வீரவங்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். 

இதன்போது பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி புத்திக சந்திரசேகர நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், இந்த வழக்கின் சாட்சி விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், வழக்குடன் தொடர்புடைய கணினி மூலம் உருவாக்கப்பட்ட ஆவணங்கள் குறித்த கணினி கட்டமைப்பை தாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். 

சாட்சிச் சட்டத்தின் கீழ் தமக்கு அவ்வாறானதொரு அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என்பதால், இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க முடியாது எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டார். 

இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், சாட்சியங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள ஆவணங்கள் உருவாக்கப்பட்ட கணினி கட்டமைப்பை ஆய்வு செய்வதற்கு பிரதிவாதி தரப்புக்கு அனுமதி வழங்கப்படுமா? என்பது குறித்த நிலைப்பாட்டை அடுத்த தவணையில் அறிவிக்குமாறு நீதவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அறிவுறுத்தினார். 

அதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கை இம்மாதம் 25 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.


சசி வீரவங்சவுக்கு எதிரான கடவுச்சிட்டு வழக்கு ஒத்திவைப்பு போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, முறையற்ற வகையில் இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவங்சவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை, வரும் 25 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதியான சசி வீரவங்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். இதன்போது பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி புத்திக சந்திரசேகர நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், இந்த வழக்கின் சாட்சி விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், வழக்குடன் தொடர்புடைய கணினி மூலம் உருவாக்கப்பட்ட ஆவணங்கள் குறித்த கணினி கட்டமைப்பை தாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். சாட்சிச் சட்டத்தின் கீழ் தமக்கு அவ்வாறானதொரு அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என்பதால், இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க முடியாது எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், சாட்சியங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள ஆவணங்கள் உருவாக்கப்பட்ட கணினி கட்டமைப்பை ஆய்வு செய்வதற்கு பிரதிவாதி தரப்புக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்த நிலைப்பாட்டை அடுத்த தவணையில் அறிவிக்குமாறு நீதவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கை இம்மாதம் 25 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

Advertisement