யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
"நாடு பொருளாதார ரீதியில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நிலையில் அதிகமானோர் வெளிநாடு செல்ல முயற்சிப்பதால் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உலகத்திற்கு எடுத்துக்காட்டாக இன,ஐக்கியத்துடன் கூடிய புதிய கடவுச்சீட்டு ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளோம்.
கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
வெகுவிரைவில் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மக்கள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு செல்வதற்கு அதிக பணம் செலவழிப்பதுடன் சில முகவர்களால் ஏமாற்றப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் - இளங்குமரன் எம்.பி உறுதி. யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,"நாடு பொருளாதார ரீதியில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நிலையில் அதிகமானோர் வெளிநாடு செல்ல முயற்சிப்பதால் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.உலகத்திற்கு எடுத்துக்காட்டாக இன,ஐக்கியத்துடன் கூடிய புதிய கடவுச்சீட்டு ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளோம்.கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். வெகுவிரைவில் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.மக்கள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு செல்வதற்கு அதிக பணம் செலவழிப்பதுடன் சில முகவர்களால் ஏமாற்றப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.