• Dec 23 2024

2025 இல் கடவுச்சீட்டுக்கு மீண்டும் வரிசை ஏற்படும் அபாயம் - அநுர அரசு எடுத்த நடவடிக்கை

Chithra / Dec 19th 2024, 9:02 am
image

 

அடுத்த ஆண்டு ஜூலை வரை மட்டுமே கடவுச்சீட்டுக்கள் வழங்குவதற்கான நகல்கள் இருப்பதால் மீண்டும் நெருக்கடி நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஒரு சிறப்புக் குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிலைமையை ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கும், அதைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, குறித்த விடயம் தொடர்பில் இந்தக் குழு இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்பிக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது 600,000 பிரதிகள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும், தேவையின் அளவைப் பார்க்கும்போது அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை இருப்பு போதுமானதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.     

2025 இல் கடவுச்சீட்டுக்கு மீண்டும் வரிசை ஏற்படும் அபாயம் - அநுர அரசு எடுத்த நடவடிக்கை  அடுத்த ஆண்டு ஜூலை வரை மட்டுமே கடவுச்சீட்டுக்கள் வழங்குவதற்கான நகல்கள் இருப்பதால் மீண்டும் நெருக்கடி நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஒரு சிறப்புக் குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.நிலைமையை ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கும், அதைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, குறித்த விடயம் தொடர்பில் இந்தக் குழு இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்பிக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.இந்த நிலையில், தற்போது 600,000 பிரதிகள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும், தேவையின் அளவைப் பார்க்கும்போது அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை இருப்பு போதுமானதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.     

Advertisement

Advertisement

Advertisement