• May 17 2026

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எக்கோ நிபுணர் இன்மையால் நோயாளர்கள் அவதி...!samugammedia

Ziya / Feb 7th 2024, 10:30 am
image

கிளிநொச்சி பொது வைத்தியசாலை எக்கோ நிபுணர் இல்லாமை நோயாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் நோயாளர்கள் சிகிச்சைக்காக  வரும் நிலையில், வைத்தியசாலையில் எக்கோ நிபுணர் இல்லாமையால் பெருமளவான நோயாளர்களுக்கு பிறிதொரு தவணை வழங்கி வருகின்றார்கள்.

இதேபோன்று அவசர நிலைமையில் உள்ள நோயாளர்களை யாழ்ப்பாணம் அல்லது வவுனியா வைத்தியசாலைக்கு எக்கோ பரிசோதனைக்காக கொண்டு செல்ல வேண்டிய துப்பாக்கி நிலையும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட எக்கோ நிபுணர் இதுவரை கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பணியினை பொறுப்பேற்காத நிலையில் நோயாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எக்கோ நிபுணர் இன்மையால் நோயாளர்கள் அவதி.samugammedia கிளிநொச்சி பொது வைத்தியசாலை எக்கோ நிபுணர் இல்லாமை நோயாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் நோயாளர்கள் சிகிச்சைக்காக  வரும் நிலையில், வைத்தியசாலையில் எக்கோ நிபுணர் இல்லாமையால் பெருமளவான நோயாளர்களுக்கு பிறிதொரு தவணை வழங்கி வருகின்றார்கள்.இதேபோன்று அவசர நிலைமையில் உள்ள நோயாளர்களை யாழ்ப்பாணம் அல்லது வவுனியா வைத்தியசாலைக்கு எக்கோ பரிசோதனைக்காக கொண்டு செல்ல வேண்டிய துப்பாக்கி நிலையும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட எக்கோ நிபுணர் இதுவரை கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பணியினை பொறுப்பேற்காத நிலையில் நோயாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனவே,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement