• Sep 20 2024

நோயாளிகள் கடுமையான ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் - மருந்து இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் samugammedia

Chithra / Jul 30th 2023, 5:06 pm
image

Advertisement

உலகிலேயே தலைசிறந்த சுகாதார கட்டமைப்புடன் கூடிய நமது நாட்டின் இலவச சுகாதாரத் துறையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மட்டுமன்றி ஊடகங்களினதும் பொறுப்பாகும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ரத்னசிறி ஹேவகே வலியுறுத்தினார்.

சுகாதாரத் துறையின் நற்பெயரைக் காக்கவும் அதன் மேன்மையை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுகாதாரத் துறைக்குப் பொறுப்பானவர்களுக்கு இதில் முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

உலகில் எந்தவொரு நாடும் தரக்குறைவான மருந்துகள் என எந்த வகையிலான மருந்துகளையும் உற்பத்தி செய்வதில்லை எனவும், குறிப்பிட்ட நாடுகளில் இருந்து ஒளடதக் கட்டுப்பாட்டு அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளை மட்டுமே சுகாதார அமைச்சு இறக்குமதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கத்தேய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகளால் சிக்கல்கள் அல்லது ஒவ்வாமை ஏற்படுவது வழமை என்றும், ஆனால் அவற்றை சரியான முறையில் கையாள்வதற்கு தேவையான வழிமுறைகள் இலங்கையில் பல வருடங்களாக நடைமுறையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மருந்து ஒவ்வாமை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் நிர்வாகத்திற்கோ அல்லது ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் இணையத்தளத்தில் உள்ள Pharmacovigilance ஊடாகவோ உடனடியாக முறையிட ஒன்லைன் முறை இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஒரு நோயாளி தனக்கிருக்கும் ஒவ்வாமை குறித்தும் தான் பயன்படுத்தும் மருந்துகள் தொடர்பாகவும் கட்டாயமாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். 


சில நோயாளிகள் தினமும் சாப்பிட வேண்டிய மருந்துகளை உட்கொள்ளாமல் தங்கள் நோய் குறையவில்லை என்று கூறுகிறார்கள். பின்னர் மருந்தின் அளவை மருத்துவர் அதிகரித்து கொடுக்கிறார். இந்நிலையில் நோயாளி கடுமையான ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அவசர கொள்வனவின் போது கூட பதிவு செய்யப்பட்ட மருந்துகளே இறக்குமதி செய்யப்படுகின்றன.அரசு மற்றும் தனியார் துறைக்கு என தனித்தனியாக மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச சுகாதாரத் துறையைப் பாதுகாக்க அரசு, ஊடகங்கள், சுகாதாரப் பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

சுகாதாரத் துறையின் நற்பெயரைக் காக்க, அதன் மேன்மையைப் பாதுகாக்கப்பட வேண்டும். சுகாதார நிர்வாகிகளுக்கு அதில் முக்கிய பொறுப்பு உள்ளது.


நோயாளிகள் கடுமையான ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் - மருந்து இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் samugammedia உலகிலேயே தலைசிறந்த சுகாதார கட்டமைப்புடன் கூடிய நமது நாட்டின் இலவச சுகாதாரத் துறையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மட்டுமன்றி ஊடகங்களினதும் பொறுப்பாகும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ரத்னசிறி ஹேவகே வலியுறுத்தினார்.சுகாதாரத் துறையின் நற்பெயரைக் காக்கவும் அதன் மேன்மையை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுகாதாரத் துறைக்குப் பொறுப்பானவர்களுக்கு இதில் முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.உலகில் எந்தவொரு நாடும் தரக்குறைவான மருந்துகள் என எந்த வகையிலான மருந்துகளையும் உற்பத்தி செய்வதில்லை எனவும், குறிப்பிட்ட நாடுகளில் இருந்து ஒளடதக் கட்டுப்பாட்டு அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளை மட்டுமே சுகாதார அமைச்சு இறக்குமதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேற்கத்தேய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகளால் சிக்கல்கள் அல்லது ஒவ்வாமை ஏற்படுவது வழமை என்றும், ஆனால் அவற்றை சரியான முறையில் கையாள்வதற்கு தேவையான வழிமுறைகள் இலங்கையில் பல வருடங்களாக நடைமுறையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.மருந்து ஒவ்வாமை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் நிர்வாகத்திற்கோ அல்லது ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் இணையத்தளத்தில் உள்ள Pharmacovigilance ஊடாகவோ உடனடியாக முறையிட ஒன்லைன் முறை இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.ஒரு நோயாளி தனக்கிருக்கும் ஒவ்வாமை குறித்தும் தான் பயன்படுத்தும் மருந்துகள் தொடர்பாகவும் கட்டாயமாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். சில நோயாளிகள் தினமும் சாப்பிட வேண்டிய மருந்துகளை உட்கொள்ளாமல் தங்கள் நோய் குறையவில்லை என்று கூறுகிறார்கள். பின்னர் மருந்தின் அளவை மருத்துவர் அதிகரித்து கொடுக்கிறார். இந்நிலையில் நோயாளி கடுமையான ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.அவசர கொள்வனவின் போது கூட பதிவு செய்யப்பட்ட மருந்துகளே இறக்குமதி செய்யப்படுகின்றன.அரசு மற்றும் தனியார் துறைக்கு என தனித்தனியாக மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இலவச சுகாதாரத் துறையைப் பாதுகாக்க அரசு, ஊடகங்கள், சுகாதாரப் பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.சுகாதாரத் துறையின் நற்பெயரைக் காக்க, அதன் மேன்மையைப் பாதுகாக்கப்பட வேண்டும். சுகாதார நிர்வாகிகளுக்கு அதில் முக்கிய பொறுப்பு உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement