• Nov 22 2024

ஜூன் மாதத்துக்கான கொடுப்பனவு - வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பணம் - மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Chithra / Jun 1st 2024, 7:05 am
image

  

அஸ்வெசும நலன்புரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு மே மாதம் இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான 1518 மில்லியன் ரூபா மாவட்ட செயலகங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக கொடுப்பனவுகள் தாமதமாகியிருந்த நிலையில், ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தின் பின்னர் முதியோர் கொடுப்பனவைப் பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலகங்களில் மே, ஜூன் மாதத்துக்கான உதவித்தொகையை பெற முடியும் எனவும், முதியோர் உதவித்தொகையை உரிய வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையின் கீழ் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தற்போது அஸ்வெசும நலன்புரித் தொகையைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களிலிருந்தும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

ஜூன் மாதத்துக்கான கொடுப்பனவு - வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பணம் - மக்களுக்கு முக்கிய அறிவிப்பு   அஸ்வெசும நலன்புரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.2024 ஆம் ஆண்டு மே மாதம் இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான 1518 மில்லியன் ரூபா மாவட்ட செயலகங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக கொடுப்பனவுகள் தாமதமாகியிருந்த நிலையில், ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தின் பின்னர் முதியோர் கொடுப்பனவைப் பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதேச செயலகங்களில் மே, ஜூன் மாதத்துக்கான உதவித்தொகையை பெற முடியும் எனவும், முதியோர் உதவித்தொகையை உரிய வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையின் கீழ் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தற்போது அஸ்வெசும நலன்புரித் தொகையைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களிலிருந்தும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement