பாலஸ்தீன காஸா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
இதனையொட்டி பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நிறுத்திக் கோரி மட்டக்களப்பு நகரில் இன்றையதினம்(07) காலை தமிழ், முஸ்லிம் பெண்களினால் அமைதி பேரணி நடைபெற்றது.
மட்டக்களப்பு லேடி மெனிங் ட்ரைவ் அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்னால் ஆரம்பமான அமைதிப் பேரணி பார் வீதி,திருமலை வீதியூடாகச் சென்று மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவை அடைந்த து.
சமுக செயற்பாட்டாளர்களான தட்சனா மூர்த்தி சாரதாதேவி,திருமதி அனீஸா பிர்தௌஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பேரணியை முன்னிட்டு பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல்- காசா யுத்தத்தை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் அமைதிப் பேரணி. பாலஸ்தீன காஸா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.இதனையொட்டி பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நிறுத்திக் கோரி மட்டக்களப்பு நகரில் இன்றையதினம்(07) காலை தமிழ், முஸ்லிம் பெண்களினால் அமைதி பேரணி நடைபெற்றது.மட்டக்களப்பு லேடி மெனிங் ட்ரைவ் அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்னால் ஆரம்பமான அமைதிப் பேரணி பார் வீதி,திருமலை வீதியூடாகச் சென்று மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவை அடைந்த து.சமுக செயற்பாட்டாளர்களான தட்சனா மூர்த்தி சாரதாதேவி,திருமதி அனீஸா பிர்தௌஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.பேரணியை முன்னிட்டு பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.