• Nov 25 2024

வரி செலுத்துவதற்கான பதிவு இலக்கம் இல்லாதவர்களுக்கு அபராதம்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Tax
Chithra / Jan 2nd 2024, 1:01 pm
image

 

இம்மாதம் முதலாம் திகதி முதல் வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கத்தை   பெறாத நபர்களுக்கு 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான TIN Number இனை பெற்றுக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை இலக்மொன்று இருப்பதை போலவே TIN Number இருக்க வேண்டியதும் அவசியமாகும். 

வரி செலுத்தக்கூடிய அளவிலான வருமானம் இருக்குமாயின் அவர்கள் வரி செலுத்த வேண்டும். அதற்காக அவர்களுக்கான வரிக் கோப்பும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிற்கு ஒருவர் வருமானமாக 12 இலட்சத்திற்கு மேல் இருந்தால் அவர்களும் வருமான வரியில் பதிவு செய்ய வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வரி செலுத்துவதற்கான பதிவு இலக்கம் இல்லாதவர்களுக்கு அபராதம். விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை  இம்மாதம் முதலாம் திகதி முதல் வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கத்தை   பெறாத நபர்களுக்கு 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான TIN Number இனை பெற்றுக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை இலக்மொன்று இருப்பதை போலவே TIN Number இருக்க வேண்டியதும் அவசியமாகும். வரி செலுத்தக்கூடிய அளவிலான வருமானம் இருக்குமாயின் அவர்கள் வரி செலுத்த வேண்டும். அதற்காக அவர்களுக்கான வரிக் கோப்பும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டிற்கு ஒருவர் வருமானமாக 12 இலட்சத்திற்கு மேல் இருந்தால் அவர்களும் வருமான வரியில் பதிவு செய்ய வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement