இரணைமடுக்குளத்தின் வலது கரைப் பகுதியில் காயங்களுக்குள்ளான நிலையில் காட்டு யானை ஒன்று ஐந்து நாட்களாக காணப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் வலது கரைப்பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் காலில் காயத்துடன் காட்டுயானை குறித்த பகுதியில் காணப்படுவதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்த நிலையில் இரண்டு தடவைகள் வந்து பார்வையிட்டதாகவும், ஐந்து நாட்கள் கடந்த நிலையில் தொடர்ந்து குறித்த யானை, காயத்துடன் குறித்த பகுதியில் சஞ்சரித்து நிற்பதால் தொழிலுக்கு செல்லும் தாம் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலையுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தரை தொடர்பு கொண்ட போது, இது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்கள வடமாகாணத்திற்கு பொறுப்பான வைத்தியருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இரணைமடுக்குள பகுதியில் காட்டு யானையால் மக்கள் பாதிப்பு. இரணைமடுக்குளத்தின் வலது கரைப் பகுதியில் காயங்களுக்குள்ளான நிலையில் காட்டு யானை ஒன்று ஐந்து நாட்களாக காணப்படுகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் வலது கரைப்பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் காலில் காயத்துடன் காட்டுயானை குறித்த பகுதியில் காணப்படுவதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்த நிலையில் இரண்டு தடவைகள் வந்து பார்வையிட்டதாகவும், ஐந்து நாட்கள் கடந்த நிலையில் தொடர்ந்து குறித்த யானை, காயத்துடன் குறித்த பகுதியில் சஞ்சரித்து நிற்பதால் தொழிலுக்கு செல்லும் தாம் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலையுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தரை தொடர்பு கொண்ட போது, இது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்கள வடமாகாணத்திற்கு பொறுப்பான வைத்தியருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.