• Nov 28 2024

மன்னார் நகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் அதிருப்தி...! முற்றுகையிடும் நிலை ஏற்படும் எனவும் எச்சரிக்கை...!

Sharmi / May 9th 2024, 4:41 pm
image

மன்னார் நகரசபை தொடர்ச்சியாக வருமானத்தை மட்டுமே மையமாக கொண்டு இயங்குவதுடன், நகரத்தை சுத்தப்படுத்துவதோ,நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பிலோ அல்லது நகரசபைக்கு உட்பட்ட பின் தங்கிய கிராமங்களுக்கு வீதிகளை அமைப்பதிலோ அக்கறை செலுத்துவதில்லை என்பது நகரசபையின் அண்மைக்கால செயற்பாடுகளில் தெரிய வந்துள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, மன்னார் நகரசபைக்குட்பட்ட பல இடங்களில் உரிய விதமாக குப்பைகள் அகற்றப்படாமல் வீதிகளில் கொட்டப்பட்டுள்ளதாகவும் வீதிகளில் கொட்டப்பட்ட குப்பைகள் நகரசபையினால் அள்ளப்படாமையினால் சிலர் வேறு வழி இன்றி முறையற்ற விதமாக குப்பைகளை எரிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

மறுபுறம் பல கிராமங்களில் வீதிகள் இல்லை எனவும் பல கிராமங்களில் நகரசபையால் சிறிது காலத்துக்கு முன் அமைக்கப்பட வீதிகள் காணமல் போயுள்ளதாகவும் மறுபக்கம் பாழடைந்த நிலையில் மன்னார் மீன் சந்தை கட்டிடம்,பராமரிப்பு இன்றி மன்னார் பேருந்து நிலையம் காணப்படுவதாகவும்  நகரசபையினால் இது தொடர்பில் எந்த ஒரு நடவடிக்கையும் சீராக இடம் பெறுவதில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், மன்னார் நகரசபையோ இவற்றில் கவனம் செலுத்தாமல் நகரசபைக்கு சொந்தமான காணிகளில் கடைத்தொகுதிகளை அமைத்து அவற்றை விற்று பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளதாகவும், முன்னதாகவே மன்னார் நகரசபையினால் விற்பனை செய்யப்பட்ட கடை தொகுதிகள் தொடர்பில் பல ஊழல் குற்றசாட்டுக்கள் காணப்படுகின்ற நிலையில் தொடர்சியாக கடைகளை கட்டுவதிலேயே நகரசபை கவனம் செலுத்தி வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மன்னார் நகரசபையின் கீழ் கட்டப்பட்ட கடைகள் பராமரிப்பு இன்றி காணப்படுவதுடன் சில கடைகள் பூரணப்படுத்தப்பட்டும் விற்பனை செய்யப்படாமல் காணப்படுகின்ற நிலையில் கடந்த வாரம் மீண்டும் ஒரு கடைத்தொகுதி கட்டுமாணத்திற்கு மன்னார் நகரசபை அடிக்கல் வைத்துள்ளது 

மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பல நிறைவேறாமல் காணப்படுகின்ற நிலையில் குறிப்பாக நகரசபைக்கு சொந்தமான இடங்களில் ஒழுங்கான குடிநீர் வசதியோ அல்லது தூய்மையான மலசல கூட வசதியோ இல்லாத நிலையில் ஒழுங்கான நூலகம்,ஒழுங்கான சிறுவர் பூங்கா, இல்லாத நிலையில் நகரசபைக்கு கிடைக்கும் வருமானகளில் அதிகளவு தொகையை கடைத் தொகுதி கட்டுமானங்களுக்கே நகரசபை செலவு செய்து வருகின்றது

நகரசபை எல்லைக்குள் முன்னிலைப்படுத்தி செய்ய வேண்டிய பல வேலைகள் காணப்படுகின்ற நிலையில் நகரசபையின் பணம் சேகரிக்கும் குறிக்கோள் தொடர்பில்  பல்வேறு முறைப்பாடுகளை மக்கள் தெரிவிக்கின்றனர்

இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய உள்ளூராட்சி ஆணையாளரும் இது தொடர்பில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.

எனவே மன்னார் நகரசபை மக்களிடம் இருந்து வரிகளை பெறுவதிலும் கடைத்தொகுதிகளை கட்டி விற்பனை செய்யும் செயற்பாட்டிலும் காட்டும் ஆர்வத்தை மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை உயர்த்துவது தொடர்பில் காட்ட வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் மன்னார் நகர சபையை மக்களை திரட்டி முற்றுகையிடவேண்டிய நிலை ஏற்படும் எனவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் நகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் அதிருப்தி. முற்றுகையிடும் நிலை ஏற்படும் எனவும் எச்சரிக்கை. மன்னார் நகரசபை தொடர்ச்சியாக வருமானத்தை மட்டுமே மையமாக கொண்டு இயங்குவதுடன், நகரத்தை சுத்தப்படுத்துவதோ,நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பிலோ அல்லது நகரசபைக்கு உட்பட்ட பின் தங்கிய கிராமங்களுக்கு வீதிகளை அமைப்பதிலோ அக்கறை செலுத்துவதில்லை என்பது நகரசபையின் அண்மைக்கால செயற்பாடுகளில் தெரிய வந்துள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, மன்னார் நகரசபைக்குட்பட்ட பல இடங்களில் உரிய விதமாக குப்பைகள் அகற்றப்படாமல் வீதிகளில் கொட்டப்பட்டுள்ளதாகவும் வீதிகளில் கொட்டப்பட்ட குப்பைகள் நகரசபையினால் அள்ளப்படாமையினால் சிலர் வேறு வழி இன்றி முறையற்ற விதமாக குப்பைகளை எரிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்மறுபுறம் பல கிராமங்களில் வீதிகள் இல்லை எனவும் பல கிராமங்களில் நகரசபையால் சிறிது காலத்துக்கு முன் அமைக்கப்பட வீதிகள் காணமல் போயுள்ளதாகவும் மறுபக்கம் பாழடைந்த நிலையில் மன்னார் மீன் சந்தை கட்டிடம்,பராமரிப்பு இன்றி மன்னார் பேருந்து நிலையம் காணப்படுவதாகவும்  நகரசபையினால் இது தொடர்பில் எந்த ஒரு நடவடிக்கையும் சீராக இடம் பெறுவதில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஆனால், மன்னார் நகரசபையோ இவற்றில் கவனம் செலுத்தாமல் நகரசபைக்கு சொந்தமான காணிகளில் கடைத்தொகுதிகளை அமைத்து அவற்றை விற்று பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளதாகவும், முன்னதாகவே மன்னார் நகரசபையினால் விற்பனை செய்யப்பட்ட கடை தொகுதிகள் தொடர்பில் பல ஊழல் குற்றசாட்டுக்கள் காணப்படுகின்ற நிலையில் தொடர்சியாக கடைகளை கட்டுவதிலேயே நகரசபை கவனம் செலுத்தி வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.ஏற்கனவே மன்னார் நகரசபையின் கீழ் கட்டப்பட்ட கடைகள் பராமரிப்பு இன்றி காணப்படுவதுடன் சில கடைகள் பூரணப்படுத்தப்பட்டும் விற்பனை செய்யப்படாமல் காணப்படுகின்ற நிலையில் கடந்த வாரம் மீண்டும் ஒரு கடைத்தொகுதி கட்டுமாணத்திற்கு மன்னார் நகரசபை அடிக்கல் வைத்துள்ளது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பல நிறைவேறாமல் காணப்படுகின்ற நிலையில் குறிப்பாக நகரசபைக்கு சொந்தமான இடங்களில் ஒழுங்கான குடிநீர் வசதியோ அல்லது தூய்மையான மலசல கூட வசதியோ இல்லாத நிலையில் ஒழுங்கான நூலகம்,ஒழுங்கான சிறுவர் பூங்கா, இல்லாத நிலையில் நகரசபைக்கு கிடைக்கும் வருமானகளில் அதிகளவு தொகையை கடைத் தொகுதி கட்டுமானங்களுக்கே நகரசபை செலவு செய்து வருகின்றதுநகரசபை எல்லைக்குள் முன்னிலைப்படுத்தி செய்ய வேண்டிய பல வேலைகள் காணப்படுகின்ற நிலையில் நகரசபையின் பணம் சேகரிக்கும் குறிக்கோள் தொடர்பில்  பல்வேறு முறைப்பாடுகளை மக்கள் தெரிவிக்கின்றனர்இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய உள்ளூராட்சி ஆணையாளரும் இது தொடர்பில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. எனவே மன்னார் நகரசபை மக்களிடம் இருந்து வரிகளை பெறுவதிலும் கடைத்தொகுதிகளை கட்டி விற்பனை செய்யும் செயற்பாட்டிலும் காட்டும் ஆர்வத்தை மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை உயர்த்துவது தொடர்பில் காட்ட வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் மன்னார் நகர சபையை மக்களை திரட்டி முற்றுகையிடவேண்டிய நிலை ஏற்படும் எனவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement