திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் அனுமதிகளைப் பெற்று மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்கான மணல் அகழ்வு அரச சட்டவிதிகள் தொடர்பாக தெளிவூட்டும் கூட்டம் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் இன்று (12) இடம்பெற்றது.
கந்தளாய் பிராந்திய எஸ்.எஸ்.பி எல்.எம். சஜ்ஜீவ பண்டார கலந்து கொண்டு மணல் அகழ்வு தொடர்பான சட்டமுறைகள் தொடர்பாகவும் அதனை மீறுவோருக்கு எதிராக எடுக்கப்படும் சட்டநடவடிக்கை தொடர்பாகவும் தெளிவூட்டினார்.
இதன்போது அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் அகழ்வு மேற்கொண்டால் சட்டநடவடிக்கை மேற்கொள்ளல், எந்த இடங்களில் மணல் அகழ்வு மேற்கொள்வது, எவ்வாறு மணல் அகழ்வு மேற்கொள்வது, அகழ்வு செய்த மணல்களை எந்தளவு வாகனங்களில் ஏற்றிச் செல்வது,மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திர நடைமுறைகள்,சட்டத்தை மீறுவோருக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள்,வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோர் வருகைதந்து மணல் அகழ்வு மேற்கொள்வதால் ஏற்படும் சட்ட சிக்கல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது தெளிவூட்டினார்.
மணல் அகழ்வு சட்ட விதிகள் தொடர்பான தெளிவூட்டல் திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் அனுமதிகளைப் பெற்று மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்கான மணல் அகழ்வு அரச சட்டவிதிகள் தொடர்பாக தெளிவூட்டும் கூட்டம் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் இன்று (12) இடம்பெற்றது.கந்தளாய் பிராந்திய எஸ்.எஸ்.பி எல்.எம். சஜ்ஜீவ பண்டார கலந்து கொண்டு மணல் அகழ்வு தொடர்பான சட்டமுறைகள் தொடர்பாகவும் அதனை மீறுவோருக்கு எதிராக எடுக்கப்படும் சட்டநடவடிக்கை தொடர்பாகவும் தெளிவூட்டினார்.இதன்போது அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் அகழ்வு மேற்கொண்டால் சட்டநடவடிக்கை மேற்கொள்ளல், எந்த இடங்களில் மணல் அகழ்வு மேற்கொள்வது, எவ்வாறு மணல் அகழ்வு மேற்கொள்வது, அகழ்வு செய்த மணல்களை எந்தளவு வாகனங்களில் ஏற்றிச் செல்வது,மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திர நடைமுறைகள்,சட்டத்தை மீறுவோருக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள்,வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோர் வருகைதந்து மணல் அகழ்வு மேற்கொள்வதால் ஏற்படும் சட்ட சிக்கல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது தெளிவூட்டினார்.