பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு அதிருப்தியடைந்துள்ள மக்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாடுகிறார்கள் எனவும் வெகுவிரைவில் மாற்றம் ஏற்படும் என்றும் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை வீட்டெடுத்தோம் என்று பெருமிதம் கொள்ளும் தார்மீக உரிமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கிடையாது.
பொருளாதார மீட்சிக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த திட்டங்களை தவிர்த்து புதிய திட்டங்கள் எதனையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
பல பொய்களை குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி இறுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக நாட்டு மக்களுக்கு குறிப்பிட்டு குறுகிய அரசியல் வெற்றிக்காக தான் பொய்யுரைத்ததை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை எவ்வித மாற்றமுமில்லாமல் முன்னெடுப்பதாக குறிப்பிடும் ஜனாதிபதி கடந்த காலங்களில் நாணய நிதியத்தின் செயற்திட்டத்துக்கு முழுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் குறிப்பிடும் காரணிகள் மூர்க்கத்தனமானவை.
வீட்டில் தேங்காய் சம்பல் செய்வதாலும், உணவுக்கு தேங்காய் பயன்படுத்துவதாலும் தேங்காய்க்கு தட்டுப்பாடு என்று பிரதி அமைச்சர் குறிப்பிடுகிறார்.
காட்டு விலங்குகளினால் விவசாய பயிர்கள் நாசமடைகிறது.
அதனால் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார்.
கடந்த காலங்களில் வீடுகளில் தேங்காய் உணவுக்கு பயன்படுத்தவில்லையா, காட்டு விலங்குகள் வாழவில்லையா? என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் ரணிலை நாடும் மக்கள் - வெகுவிரைவில் மாற்றம் ஏற்படும் முன்னாள் அமைச்சர் சூளுரை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு அதிருப்தியடைந்துள்ள மக்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாடுகிறார்கள் எனவும் வெகுவிரைவில் மாற்றம் ஏற்படும் என்றும் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.அநுராதபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை வீட்டெடுத்தோம் என்று பெருமிதம் கொள்ளும் தார்மீக உரிமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கிடையாது.பொருளாதார மீட்சிக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த திட்டங்களை தவிர்த்து புதிய திட்டங்கள் எதனையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.பல பொய்களை குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி இறுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக நாட்டு மக்களுக்கு குறிப்பிட்டு குறுகிய அரசியல் வெற்றிக்காக தான் பொய்யுரைத்ததை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை எவ்வித மாற்றமுமில்லாமல் முன்னெடுப்பதாக குறிப்பிடும் ஜனாதிபதி கடந்த காலங்களில் நாணய நிதியத்தின் செயற்திட்டத்துக்கு முழுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் குறிப்பிடும் காரணிகள் மூர்க்கத்தனமானவை.வீட்டில் தேங்காய் சம்பல் செய்வதாலும், உணவுக்கு தேங்காய் பயன்படுத்துவதாலும் தேங்காய்க்கு தட்டுப்பாடு என்று பிரதி அமைச்சர் குறிப்பிடுகிறார்.காட்டு விலங்குகளினால் விவசாய பயிர்கள் நாசமடைகிறது.அதனால் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார்.கடந்த காலங்களில் வீடுகளில் தேங்காய் உணவுக்கு பயன்படுத்தவில்லையா, காட்டு விலங்குகள் வாழவில்லையா என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.