சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பதவி உயர்வு முறை ஏற்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
கிராமப்புற அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே இதனைத் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சமூக வலுவூட்டலுக்கான தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்படி, அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் பதவி உயர்வு வழங்குவதற்குத் தேவையான தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் நடத்தப்படும்.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய பிரச்சினையை சில வாரங்களுக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு விரைவில் பதவி உயர்வு - ஓய்வூதிய பிரச்சினைக்கும் தீர்வு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பதவி உயர்வு முறை ஏற்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.கிராமப்புற அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே இதனைத் தெரிவித்தார்.கம்பஹா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சமூக வலுவூட்டலுக்கான தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்படி, அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் பதவி உயர்வு வழங்குவதற்குத் தேவையான தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் நடத்தப்படும்.சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய பிரச்சினையை சில வாரங்களுக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.