வெள்ள அனர்த்தம் காரணமாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 அங்கத்தவர்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர்.
இவர்கள் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, ஜே/57 கிராம சேவகர் பிரிவில் வசிப்பவர்கள்.
தமது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாகவும், வீட்டை சுற்றி பாம்புகள் உள்ளதாகவும் கூறுகின்ற அவர்கள், இவற்றை எல்லாம் சீர்செய்து வழங்கினால் மட்டுமே தங்களால் வீடுகளுக்கு செல்ல முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த பிரச்சனை ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவதாகவும், இதற்கு ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
வீட்டை சுற்றி பாம்புகளும் வெள்ளமும் உள்ளதால் வீட்டுக்கு செல்ல முடியாத நிலை - மக்கள் கவலை வெள்ள அனர்த்தம் காரணமாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 அங்கத்தவர்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர்.இவர்கள் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, ஜே/57 கிராம சேவகர் பிரிவில் வசிப்பவர்கள்.தமது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாகவும், வீட்டை சுற்றி பாம்புகள் உள்ளதாகவும் கூறுகின்ற அவர்கள், இவற்றை எல்லாம் சீர்செய்து வழங்கினால் மட்டுமே தங்களால் வீடுகளுக்கு செல்ல முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.இந்த பிரச்சனை ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவதாகவும், இதற்கு ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.