மக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து மழை காலங்களில் வெளியேறும் வெள்ளநீர் கழிவு வாய்க்காலை மூடி அத்துமீறி நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கவலை வெளியிடப்படுகிறது.
செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதி நெத்திலி ஆற்றுபகுதிக்கு ஒதுக்கப்பட்ட பகுதியாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் குறித்த 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அவர்கள் நாளாந்தம் பயன்படுத்தி வரும் பிரதான பாதை மற்றும் அப்பாதைக்கு அருகே உள்ள கழிவு வாய்க்கால் என்பனவற்றை மூடி அத்துமீறி நெற்செய்கையில் ஈடுபட்டு வருவதன் காரணமாக போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலையில் காணப்படுகிறது.
அத்துடன் இப்பகுதியில் இருந்து கற்றல் நடவடிக்கைக்காக பல மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் பிரதான வீதியாகவும் காணப்படுவதன் காரணமாக இவ்வீதியையும் தற்பொழுது சேதப்படுத்தி உள்ளனர்.
இனிவரும் காலங்களில் தொடர் மழை காணப்படும் நிலையில் அப்பகுதியிலிருந்து நீர் வெளியேற முடியாத நிலை ஏற்படும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வெள்ள அனர்த்தத்திலிருந்து தம்மை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
உழவனூரில் கழிவு வாய்க்காலை மூடி அத்துமீறி நெற்செய்கை மேற்கொள்வதால், மக்கள் கவலை மக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து மழை காலங்களில் வெளியேறும் வெள்ளநீர் கழிவு வாய்க்காலை மூடி அத்துமீறி நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கவலை வெளியிடப்படுகிறது. செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதி நெத்திலி ஆற்றுபகுதிக்கு ஒதுக்கப்பட்ட பகுதியாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் குறித்த 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் நாளாந்தம் பயன்படுத்தி வரும் பிரதான பாதை மற்றும் அப்பாதைக்கு அருகே உள்ள கழிவு வாய்க்கால் என்பனவற்றை மூடி அத்துமீறி நெற்செய்கையில் ஈடுபட்டு வருவதன் காரணமாக போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலையில் காணப்படுகிறது. அத்துடன் இப்பகுதியில் இருந்து கற்றல் நடவடிக்கைக்காக பல மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் பிரதான வீதியாகவும் காணப்படுவதன் காரணமாக இவ்வீதியையும் தற்பொழுது சேதப்படுத்தி உள்ளனர். இனிவரும் காலங்களில் தொடர் மழை காணப்படும் நிலையில் அப்பகுதியிலிருந்து நீர் வெளியேற முடியாத நிலை ஏற்படும் என மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வெள்ள அனர்த்தத்திலிருந்து தம்மை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.