"இலங்கை மக்கள் தற்போது ஆட்சியில் உள்ள அரசை அடியோடு வெறுக்கின்றார்கள். அரசியலில் அவர்கள் வரலாறு காணாத மாற்றத்தை விரும்புகின்றார்கள். எனவே, மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்த தேசிய மக்கள் சக்தியினராகிய நாங்கள் தயாராக இருக்கின்றோம்."
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி., இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் நேரில் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள இந்தியன் இல்லத்தில் நேற்று (23) நடைபெற்ற சந்திப்பின்போதே அநுரகுமார எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்தும், பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும், தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத் எம்.பியும் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டார்.
"இலங்கை மக்கள் தற்போது ஆட்சியில் உள்ள அரசை அடியோடு வெறுக்கின்றார்கள் - இந்தியத் தூதுவரிடம் அநுர தெரிவிப்பு. "இலங்கை மக்கள் தற்போது ஆட்சியில் உள்ள அரசை அடியோடு வெறுக்கின்றார்கள். அரசியலில் அவர்கள் வரலாறு காணாத மாற்றத்தை விரும்புகின்றார்கள். எனவே, மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்த தேசிய மக்கள் சக்தியினராகிய நாங்கள் தயாராக இருக்கின்றோம்."இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி., இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் நேரில் தெரிவித்தார்.கொழும்பில் உள்ள இந்தியன் இல்லத்தில் நேற்று (23) நடைபெற்ற சந்திப்பின்போதே அநுரகுமார எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்தும், பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும், தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத் எம்.பியும் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டார்.