வவுனியாவில் போரால் உயிரிழந்தவர்களுக்கு மூவின மக்களும் இணைந்து அஞ்சலி நிகழ்வு ஒன்றினை இன்று மேற்கொண்டிருந்தனர்.
வன்னி மக்கள் ஒன்றியம் மற்றும் போரினால் உயிரிழந்த உறவுகளின் ஒருங்கிணைப்புக் குழு என்னும் அமைப்புக்களின் பெயரில் குறித்த நினைவு அஞ்சலி நிகழ்வு நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.
கண்டிய நடனம், மேளதாள வாத்தியம் என்பவற்றுடன் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தலைவர்கள், அரச சார்ப்பு கட்சி உறுப்பினர்கள் உட்பட்ட அதிதிகள் வரவழைக்கப்பட்டு விருந்தினர் மேடையில் அமைரச் செய்யப்பட்டதுடன், மதத் தலைவர்களின் ஆசி உரைகளும் இடம்பெற்றது.
இதன்போது போரால் உயிரிழந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் நினைவாக தீபம் ஏற்றப்பட்டு மக்கள் அஞ்சலி செலுத்தியதுடன் தென்னை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
வவுனியாவில் போரால் உயிரிழந்தவர்களுக்கு மூவின மக்களும் இணைந்து அஞ்சலி. வவுனியாவில் போரால் உயிரிழந்தவர்களுக்கு மூவின மக்களும் இணைந்து அஞ்சலி நிகழ்வு ஒன்றினை இன்று மேற்கொண்டிருந்தனர்.வன்னி மக்கள் ஒன்றியம் மற்றும் போரினால் உயிரிழந்த உறவுகளின் ஒருங்கிணைப்புக் குழு என்னும் அமைப்புக்களின் பெயரில் குறித்த நினைவு அஞ்சலி நிகழ்வு நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.கண்டிய நடனம், மேளதாள வாத்தியம் என்பவற்றுடன் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தலைவர்கள், அரச சார்ப்பு கட்சி உறுப்பினர்கள் உட்பட்ட அதிதிகள் வரவழைக்கப்பட்டு விருந்தினர் மேடையில் அமைரச் செய்யப்பட்டதுடன், மதத் தலைவர்களின் ஆசி உரைகளும் இடம்பெற்றது.இதன்போது போரால் உயிரிழந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் நினைவாக தீபம் ஏற்றப்பட்டு மக்கள் அஞ்சலி செலுத்தியதுடன் தென்னை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.